Connect with us
serial

latest news

கர்ப்ப காலத்திலும் நடிப்புதான் முக்கியம்! அப்படி நடித்த சீரியல் நடிகைகளின் லிஸ்ட் இதோ

Serial Actress:  சினிமா என்ற வந்து விட்டாலே தனது சொந்த வாழ்க்கை குடும்பம் குழந்தைகள் என அனைத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் சினிமாவில் நடிக்க வந்தால் குடும்பம் ஒரு பக்கம் தொழில் ஒரு பக்கம் என எல்லாவற்றையும் சமமாக பார்க்க வேண்டும். அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் அவர்கள் சமாளித்து தான் ஆக வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்ப்ப காலத்திலும் சீரியலில் நடித்த வந்த சீரியல் நடிகைகள் யார் யார் என்பதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நடிகை நட்சத்திரா. இவர் கர்ப்பமாக இருந்த போதிலும் தொடர்ந்து இடைவிடாது சீரியலில் நடித்து வந்தார். இவருக்கு இப்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இதையும் படிங்க: பிரம்மாண்டமான செட் போட்ட தமிழ் சினிமா உலகம்… டி.ராஜேந்தருக்கே முன்னோடி இவங்கதானாம்!

அடுத்ததாக மானசா. ராஜா ராணி சீரியல் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்த நடிகையாக மானசா உயர்ந்தார். மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடிக்கும் போதே 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருந்தாலும் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்தார். அதன் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

அடுத்ததாக காயத்ரி யுவராஜ். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் ஒரு நல்ல டான்ஸரும் ஆவார். இவர் பிரசவத்துக்கு ஒரு மாதம் மட்டும் இருக்கும் நிலையில் தான் சீரியலில் இருந்து விலகினார். அடுத்ததாக இப்போது இன்ஸ்டாகிராம் மூலமாக மிகவும் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். இதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவது மருமகளாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் ரஜினி, விஜயை விட கமலுக்கே முதலிடம் கொடுத்த பிரபலம்…! ஏன்னு தெரியுமா?

அந்த சீரியலில் நடிக்கும் போதே இவர் கர்ப்பமாகி இருந்தார். ஏழு மாத கர்ப்பம் வரை அந்த சீரியலில் நடித்து அதன் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டார். குழந்தை பெற்ற மூன்றே மாதத்தில் மீண்டும் நடிக்க வந்தார். அடுத்ததாக வில்லி கதாபாத்திரத்திற்கு என பேர் போனவர் ஃபரீனா. பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு ஆக்ரோஷமான வில்லியாக நடித்திருப்பார். இவர் கர்ப்பமாக இருக்கும் போதே தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். 8 மாதம் இருக்கும் நிலையில் தான் சீரியலில் இருந்து விலகினார் .தற்போது மீண்டும் நடித்து வருகிறார் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருக்கிறார்.

google news
Continue Reading

More in latest news

To Top