இவர் 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னி...இப்போது இவர் நிலைமையைப் பாருங்க...!

Actress Heera
ஹீரா ராஜகோபாலன். இவர் 90களில் கலக்கிக்கிட்டு இருந்த நடிகை. இவர் அந்தக் காலகட்டத்தில ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார். இவரது முதல் படம் முரளியுடன் ஜோடியாக நடித்த இதயம். இளம் உள்ளங்களைக் காதல் என்னும் பூங்காவிற்கு அழைத்துச் சென்ற படம் தான் இதயம். 1991ல இந்தப்படம் வந்து ரசிகர்களைக் கட்டிப் போட்டது.

heera
இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உருவானது. 1999ல் தொடரும் என்ற படத்தில் அஜீத்தின் ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இரண்டு பேருக்கும் செமயாக இருந்தது ஜோடிப்பொருத்தம். அது எப்படி அமைஞ்சதுன்னா அவங்களோட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது. அதுதான் காரணம்.

Heera, Ajithkumar in Kathal Kottai
தொடர்ந்து அஜீத், ஹீரா குறித்த கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அஜீத்தின் காதல் கோட்டை படத்தில் மொட்டு மொட்டு மலராத மொட்டு என்ற கவர்ச்சி பாடலுக்கு மட்டும் தாராளமான உடையில் வந்து கவர்ச்சி ஆட்டம் போட்டு இருந்தார் ஹீரா. இப்போது பார்த்தாலும் நம்மை கிறங்கச் செய்து விடும் இந்தப் பாடல்!
அவ்வளவு கவர்ச்சியையும் வாரி இறைத்திருந்தார் நடிகை ஹீரா. இதற்கு முன் நடிகர் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசு வந்தது. சரத்குமார் இவர் மீது ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு பொண்ணு கேட்டு சென்றதாகவும் கூறப்பட்டது. தசரதன் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.

Kathal Kottai heera
இவர் சென்னையில் பிறந்தார். 2002 தொழில் அதிபர் புஷ்கர் மாதவைத் திருமணம் செய்தார். 2006ல கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்தாகி அமெரிக்காவில் செட்டில் ஆனாங்க. இந்தில சஞ்சய் தத் படமான அமானத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் உடன் நிர்ணயம் படத்தில் அறிமுகமானார்.
இவர் கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, அஜீத்குமார், நாகர்ஜூனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவிதேஜா, ரமேஷ் அரவிந்த், அனில் கபூர் ஆகிய முன்னணி இந்தியத் திரைப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவ்வைசண்முகியில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். கமலின் சதிலீலாவதி படத்தில் ரமேஷ் அரவிந்த் ஜோடியாக நடித்துள்ளார்.

heera
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதுவரை அவர் நடித்த நடிப்பில் இந்தப்படத்தின் நடிப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தற்போது பெண்களுக்கு என ஒரு அமைப்பை நிறுவி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிறு குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்து வருகிறார்.
பெண்களுக்கு எதிராக நடக்கிற அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார். போராட்டமும் நடத்துறாங்க. 47 வயதானாலும் இன்னும் 2வது திருமணம் பண்ணாம பொதுவாழ்க்கைல பிசியாக இருக்கிறார் நடிகை ஹீரா என்பது பாராட்டுதலுக்குரியது.