ஒற்றை எழுத்து பெயர் கொண்ட இவர் தான் அரசியல் சாணக்கியர்

by sankaran v |
ஒற்றை எழுத்து பெயர் கொண்ட இவர் தான் அரசியல் சாணக்கியர்
X

சோ இந்த ஒற்றை எழுத்து மந்திரம் அரசியலையே புரட்டிப் போட்டது. நடிகர், ஊடகவியலாளர், வழக்கறிஞர், பத்தரிகை ஆசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் தான் சோ.

சோ ராமசாமியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. திரைத்துறையில் நகைச்சுவை நாயகராகவும், அரசியல் துறையில் சாணக்கியராகவும் விளங்கியவர்.

இவர் துக்ளக் என்ற பத்திரிகையை நடத்தினார். இவருடைய ஆலோசனையின் பேரில் தான் அரசியல் கட்சி தலைவர்களே செயல்பட்டு வந்தனர். துக்ளக் பத்திரிகையில் இவர் போடும் அரசியல் நையாண்டிகள் படிப்பதற்கு வெகு ரசனையாக இருக்கும்.

மயிலாப்பூரில் ஸ்ரீனிவாச ஐயர் ராமசாமி 5.10.1934ல் பிறந்தார். இவரது தந்தையார் ஸ்ரீனிவாசன். தாயார் ராஜம்மாள். சோ தனது திறமையான பணிக்காக பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளார்.

சோ தனது பள்ளிப்படிப்பை மயிலாப்பூரில் முடித்தார். பின்னர் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக்கல்லூரியிலும் படிப்பை முடித்து 1962ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார்.

பின்னர் டிடிகே கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். 1966ல் திருமணம் முடிந்தது. வாழ்க்கைத் துணைவியார் சௌந்தராம்பா. இவருக்கு 1 மகன், 1 மகள்.

சோ என்ற பெயரே ஓரெழுத்தில் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அது எப்படி வந்தது என்று தெரியுமா? பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகம். அதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் சோ. அன்று. முதல் இவருக்கு இப்பெயரே நிலைத்து விட்டது.

இவர் நடித்த படங்கள் முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, நிறைகுடம், தங்கப்பதக்கம், நினைவில் நின்றவள், ஆயிரம் பொய், பொம்மலாட்டம், குரு சிஷ்யன், அடிமைப்பெண்.

1957ல் நாடகங்களை எழுத ஆரம்பித்தார். 1970ல் துக்ளக் இதழைத் தொடங்கினார். 14 திரைப்படங்களுக்கு கதை எழுதினார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 4 படங்களை இயக்கி உள்ளார். பத்திரிகையில் பணியாற்றியதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் ஒன்று 1966ல் பெற்ற வீரகேசரி விருது.

22 நாடகங்கள், 18 நாவல்கள், அரசியல், கலை பிரிவுகளில் பல்வேறு கட்டுரைகள் இவரது கைவண்ணத்தில் உருவானவை. இவரது முகமது பின் துக்ளக் நாடகம் கலைத்துறையில் யாராலும் மறக்க முடியாதது. அரசியல் நையாண்டி நாடகம். பிற்காலத்தில் திரைப்படமாகவும் வெளியானது.

இந்திராகாந்தி நெருக்கடி நிலை பிரகடனம் கொண்டு வந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது துக்ளக் பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்தார். அரசியல் நையாண்டிகளை விமர்சனம் செய்வதற்கு அஞ்சாதவர்.

ஜெயலலிதா மூப்பனார் கூட்டணி ஆட்சி, ரஜினி தாமாகாவுக்கு வாய்ஸ் கொடுத்தது இதற்கு எல்லாம் சோ தான் காரணம்.
1999 முதல் 2005 வரை வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். இவரது போக்கு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். இவருக்கு மதுரையில் அமில முட்டை வீசப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரைச் சேர்த்த அதே அப்போலா மருத்துவமனையில சோ.ராமசாமி 6.12.2016ல் காலமானார். ஜெயலலிதா இறந்து இரண்டே நாளில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story