Connect with us
arukeer

latest news

கதையைக் கேட்காமல் நடிக்க சம்மதித்த விஜயகாந்த் – சொல்கிறார் அருண்பாண்டியன்

ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்  டி.பி.செல்லையாவின் மகன் நடிகர் அருண் பாண்டியன். விகடன் படத்தை இயக்கியவர். ஐங்கரன் பட நிறுவனத்தை இவர் தான் நடத்தி வருகிறார்.

2011ல் தேமுதிக கட்சியின் சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். தென்னிந்திய திரைப்பட நிதியாளர்கள் சங்கத்தின் செயலாளர், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.

arun-pandian

அருண்பாண்டியன் 13.7.1958ல் இலஞ்சியில் பிறந்தார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவரது மறைந்த அண்ணன் சி.துரை பாண்டியன் ஊழியன் படத்தை 1994ல் இயக்கினார். அருண்பாண்டியனுக்கு கவிதா, கிரானா, கீர்த்தி என 3 மகள்கள் உள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். மகள் கீர்த்தி மற்றும் மருமகள் ரம்யா நடிகைகளாக உள்ளனர்.

இவரது படங்கள் அன்பிற்கினியாள், இணைந்த கைகள், முற்றுகை, கோட்டை வாசல், தேவன், அசுரன் (1995), ஊமை விழிகள், விகடன், சின்னதுரை பெரிய துரை, ராஜ முத்திரை, திருப்பதி, அதிகாரி, தாயகம், போலீஸ் அட்டாக், ஜூங்கா, விருதகிரி, ஊழியன், உரிமைப்போர், கடவுள், இன்பா, சிவன், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே, சவாலே சமாளி, ரோஜா மலரே, செந்தூரப்பூவே, ரிஷி, புரட்சிக்காரன், ஆசை தம்பி, களவாடிய பொழுது, ஏகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தேவன், ஏகன், பேராண்மை, அங்காடி தெரு, முரட்டுக்காளை ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

அருண்பாண்டியன் வில்லனாகவும் நடித்துள்ளார். ரோஜா மலரே, வீரநடை, திருப்பதி, இன்பா, ரிஷி, மதுரை பொண்ணு சென்னை பையன், கோவை பிரதர்ஸ் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவரது மகள் கீர்த்தி அருண்பாண்டியன் தனது அன்பிற்கினியாள் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கான வரவேற்புக்குப் பிறகு இவருக்கு கண்ணகி என்ற படம் கிடைத்தது. தற்போது இந்தப்படத்திற்கான போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kannaki

கர்ப்பிணியாக உள்ள இவரது தொப்புளில் இருந்து வெடி மருந்து திரியானது தரையைத் தொடுவது போலவும் அந்த திரியில் ஒரு கை வந்து நெருப்பைப் பற்ற வைப்பது போலவும் கொடூரமாக சிந்தித்துள்ளார்கள்.

1985ல் வெளியான காமெடி த்ரில்லர் படம் சிதம்பர ரகசியம். இந்தப்படத்தில் தான் அருண்பாண்டியன் அறிமுகமானார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண்பாண்டியன் நடிப்பில் வெளியான படம் தான் அன்பிற்கினியாள். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இடைவெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரது சுவாரசியமான பேட்டியில் இருந்து கிடைத்த தகவல்கள்:

அன்பிற்கினியாள் படம் தந்தை மகள் உறவைப் பற்றி மிகவும் அற்புதமாக விளக்கும் படம். படத்தின் நடுவில் சின்ன த்ரில்லரான விஷயம் உள்ளது. படத்தைப் பார்க்கும் தந்தை மகள் யாராக இருந்தாலும் ஆனந்த கண்ணீர் விட்டுத் தான் வெளியே வருவார்கள் என்கிறார் அருண்பாண்டியன்.

கீர்த்தி பாண்டியனுக்கு தந்தையின் நடிப்பில் இணைந்த கைகள், அசுரன் ஆகிய படங்கள் மிகவும் பிடித்தவை.

inaintha

இணைந்த கைகளில் டூப் எதுவும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அருண்பாண்டியன். இப்போது கூட அந்த மாதிரி நடிப்பது மிகவும் சிரமம். ராம்கி இவரது நெருங்கிய நண்பர். அருண்பாண்டியன் மலை மேல் வேகமாக ஏறும்போது நீ பாட்டுக்கு மேல ஏறிக்கிட்டே இருக்கன்னு ராம்கி திட்டுவாராம்.

devan11

தேவன் படத்தை இயக்கிய போது நடிகர் விஜயகாந்திடம் போய் கதை சொல்ல சென்றார் அருண்பாண்டியன். இவர் வந்ததும் விஷயத்தைச் சொன்னார். ரொம்ப சந்தோஷம் பாண்டி என்கிறார் விஜயகாந்த். கதை சொல்றேன் சார் என்றதும், ஏ…அதெல்லாம் வேண்டாம் பா நான் நடிக்கிறேன் என்றாராம் விஜயகாந்த்.

அருண்பாண்டியனும், மகள் கீர்த்தியும் இணைந்து நடித்த அன்பிற்கினியாள் படத்தில் மறக்க முடியாத காட்சி எது என்று அருண்பாண்டியன் சொல்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்காகத் தான் புகைபிடித்தேன்.

அதுவும் நிறைய பிடித்துள்ளேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மகள் என்னிடம் இனிமேல் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று சொன்னதும், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு விடுவேன். அப்போது படத்தில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் சிகரெட்டை நிறுத்தி விட்டேன் என்கிறார்.

ரொம்பவே கூலான தந்தையாக உள்ளார். யாருக்கும் அறிவுரை கூறுவதே பிடிக்காது. கருத்து வேண்டுமானால் சொல்வேன். விழுந்து அடிப்பட்டு தான் திருந்தணும் என்றால் அப்படியே திருந்தட்டும் என்று விட்டுவிடுவேன். அறிவுரை பண்ணும் பெற்றோரிடம் ரொம்பவும் கவனமா இருங்க.

யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீங்க. பிள்ளைகளை ப்ரீயா விட்டா தானா வளரும். இல்லன்னா நம்மள பார்த்து வளரும் என்றும் வாழ்க்கையின் ரகசியங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.

google news
Continue Reading

More in latest news

To Top