குபீர் சிரிப்பை வரவழைக்கும் சூரியின் சூப்பர்ஹிட் படங்கள்
நடிகர் சூரி தமிழ்ப்படங்களில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகி விட்டார். இவர் படத்தில் நடித்தால் சிரிப்பு கலகலவென அள்ளிக்கொண்டு வருகிறது.
இவரது இயற்பெயர் சூரி முத்துசாமி. சொந்த ஊர் மதுரை. 1999ல் நினைவிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். காதல் படத்தில் தான் கொஞ்சம் அல்ல செம ஹிட்டானார். இந்தப்படத்தில் மேன்சனில் இவர் பேசும் அலும்பு தாங்க முடியாது.
இவர் நடித்த படங்களில் ஒருசில சூப்பர்ஹிட்டுகளை இப்போது பார்ப்போம்.
தீபாவளி
எழில் இயக்கத்தில் 2007ல் வெளியான படம். ஜெயம் ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், கொச்சி ஹனீபா இவர்களுடன் சூரி நடித்துள்ளார். படம் சூப்பர்ஹிட்டானது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மாஸ். காதல் வைத்து, கண்ணன் வரும் வேளை, போகாதே போகாதே, தொடுவேன் தொடுவேன், டோல் பாஜே ஆகிய பாடல்கள் உள்ளன.
வெண்ணிலா கபடி குழு
2009ல் விஷ்ணுவிஷாலின் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம். வி.செல்வகணேஷ் இசை அமைத்துள்ளார். அப்புக்குட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் சூரி நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருப்பார். இதனால் பரோட்டா சூரி என்றும் ரசிகர்கள் இவரை செல்லமாக அழைக்கின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். கபடி கபடி, லேசா பறக்குது, வந்தனம் வந்தனம், பாட பாட, உயிரில் ஏதோ ஆகிய பாடல்கள் உள்ளன.
வாகை சூட வா
2011ல் சற்குணம் இயக்கத்தில் வெளியான படம். விமல், இனியா, கே.பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
தஞ்சாவூரு, போறானே போறானே, ஆனா ஆவன்னா, செங்க சூளைக்காரா, சர சர சார காத்து. தைலா தைலா ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம்
2011ல் ஜெயம் ராஜா இயக்கிய படம். தளபதி விஜய் உடன் சூரி கைகோர்த்துள்ளார். ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சரண்யா மோகன், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தண்டபாணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் சக்கை போடு போட்டன. ரத்தத்தின் ரத்தமே, மொளச்சு மூணு, சில்லாக்ஸ், மாயம் செய்தாயோ, சொன்னா புரியாது, வேலா வேலா வேலாயுதம் ஆகிய பாடல்கள் உள்ளன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
2013ல் வெளியான சூப்பர்ஹிட் நகைச்சுவை படம். பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்து மாதவி உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷனில் காமெடி பட்டையைக் கிளப்பியது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைப் போடு போட்டன. ஊதா கலரு ரிப்பன், இந்த பொண்ணுங்களே, பாக்காதே பாக்காதே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், என்னடா, என்னடா ஆகிய பாடல்கள் உள்ளன.