சிறை வேறு மொழிகளில் வெளியாகி இருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா? - வெற்றிமாறன் பேச்சு

 

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சிறை. விஜய் நடிப்பில் வெளியான லியோ, மாஸ்டர் படங்களை தயாரித்த லலித்குமார் தயாரித்தது மட்டும் தனது மகன் அக்சய் குமாரை படத்தில் இன்னொரு நாயகனாக அறிமுகப்படுத்தினார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய முதல் படம் இது.

இந்த் படம் விமர்சனரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை கொடுத்தது. சுமார் ரூ. 35 கோடி வசூலானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறை படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாரன் பேசியபோது, சிறை படத்தை தமிழக மக்கள் பார்த்த வித்ம் சிறப்பானது.மற்ற மொழிகளில் சிறை படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. தமிழில் மட்டும்தான் இது போன்ற முயற்சிகளை செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று பேசினார்.

From Around the web