தமிழ்சினிமாவில் மலையாள வாடை வீசும் சூப்பர்ஹிட் படங்கள் - ஓர் பார்வை

by sankaran v |   ( Updated:2022-09-06 18:28:55  )
தமிழ்சினிமாவில் மலையாள வாடை வீசும் சூப்பர்ஹிட் படங்கள் - ஓர் பார்வை
X

Uthama Villain

பொதுவாக மலையாளப் படங்கள் என்றாலே ஒரு வித அமைதி இருக்கும். ரசிக்கும் விதத்தில் காட்சிகள் அதன் லொகேஷன்கள் நம்மைக் கவரும். நடிகர், நடிகைகளும் கூட தன்மையாக பேசுவர். இயற்கை எழில் கொஞ்சும் அழகு...கடவுளின் சொர்க்க பூமி என்றாலே அது கேரளா தான். அந்த ரசனை மலையாளப்படங்களில் சிறிதும் குறையாது.

அந்த வகையில் ஓணம் கொண்டாடி வரும் இவ்வேளையில் நாம் இப்போது சில தமிழ்ப்படங்களைப் பார்ப்போம். ஏன் தமிழ்ப்படங்கள் என்றால் இது மலையாள வாடை வீசும் தமிழ்ப்படங்கள் அதனால் தான். சரி..இப்போது இதோ அந்த லிஸ்ட்...!

ஆட்டோகிராப்

Autograph Seeran, Gopika

இந்தப்படத்தின் கதாநாயகி கோபிகா. என்ன ஒரு ரசனையுடன் கூடிய அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு சாந்தம். அவ்வளவு நளினம். அந்தக் குரலோ வெண்கலத்தினாலானது.

இவர் சேரனுடன் நளினமாக வெட்கத்துடன் காதலிக்கும் அழகோ அழகு தான். அதிலும் கேரளாவின் பல எழில் கொஞ்சும் இடங்களைப் படத்தில் பார்க்கும் போது காட்சிகள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

விண்ணைத்தாண்டி வருவாயா

VTV

சிம்பு திரிஷாவின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆன படம். அதிலும் கேரளாவின் பின்னணியில் கதை நகரும்போது எப்படி தான் நாம் காட்சியுடன் ஒன்றிணைகிறோமோ தெரியவில்லை.

அது ஒரு தனி ரசனை தான். அந்த இடங்களைப் பார்க்கும்போதே ஒரு டூர் அடித்து விடலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

விஸ்வரூபம்

visharoopam kamal

ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம். தீவிரவாதிகளின் அட்டூழியத்தைப் படம் தோலுரித்துக் காட்டுகிறது. அந்த களேபரத்தைப் பார்ப்பதற்கு முன் ஒரு ரம்மியமான பாடலை வைத்தால் என்ன என்ற எண்ணம் நம் உலகநாயகனுக்குத் தோன்றியது போலும்...!

அது தான் உன்னைக்காணாத நான் இன்று நானில்லையே...! என்ற அந்தப் பாடல் அதில் கமல் ஆடும் கதக்; நடனம் காண்போரைப் பிரமிக்க வைத்தது. கதக் நடனத்தை பிர்ஜூ மகாராஜாவிடம் முறைப்படி கற்று கமல் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தமவில்லன்

இந்தப்படத்தில் கமல் ஆடும் கேரள நாட்டியம் நமது விழிகளை ஆச்சரியத்துடன் விரிய வைக்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சியில் கமலுக்கு கேரளாவின் பாரம்பரியமான இந்த நடனத்திற்கான மேக் அப் போடப்படுகிறது.

பிரமாதமாக ஆடி அசத்துகிறார் நம் உலகநாயகன். கே.பாலசந்தரும் கமலுடன் கடைசியாக நடித்த படம். உத்தமவில்லனில் கமல் ஆடும் தெய்யம் நடனம் நமக்குள் ஒரு தெய்வீகத்தை தந்தருளுகிறது. இது கேரளாவின் தெய்வீக நடனம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபநாசம்

papanasam kamal

இந்தப்படம் த்ரிஷ்யம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக். கதை அற்புதமான திடீர் திருப்பங்களுடன் கூடிய சுவாரசியமிக்கது. காட்சிக்குக் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து ரசிக்க வைக்கிறது. படத்தில் நடக்கும் கொலையில் இருந்தே காட்சிகள் பரபரப்பாகி விடுகின்றன.

கதாநாயகன் கமலுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் பதற்றம் மற்றும் பய உணர்வுகள் நம்மையும் தொற்றி விடுகின்றன. அடுத்து என்ன நடக்கப்போகிறது என காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை உறைய வைக்கின்றன.

Next Story