மவனே! கடைசியா சொல்றேன் இனிமேல் ஒழுங்கா இரு.... நடிகர் சூர்யாவை எச்சரித்த தீவிர ரசிகர்!
நடிகர் சூர்யாவை திட்டிய தீவிர ரசிகரன்!
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் திரைப்படம் குறித்து எந்த ப்ரோமோஷனும் கொடுப்பதில்லை.
இப்படியான நேரத்தில் பிக்பாஸ் முகென் நடித்துள்ள வேலன் என்ற திரைப்படத்தின் ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டிருந்த சூர்யா, " பிரபு அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வேலன் பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்து கடுப்பான தீவிர ரசிகர் ஒருவர், " நல்லவனா இருக்கலாம் அதுக்குன்னு ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது. நீங்கள் நடித்துள்ள ஜெயபீம் படத்திற்கு எந்த ப்ரோமோஷனும் கொடுக்க முடியல. ஆனால் மற்ற நடிகர்களை தூக்கிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் நீங்க உங்கள் பட புரமோஷன் பத்தி பாருங்கள். சும்மா எல்லாருக்கும் ப்ரமோஷன் போட்டு உங்க மதிப்பை குறைக்காதிங்க.
இதையும் படியுங்கள்:ஒரு சைடு மட்டும் காட்டுவேன் ஓகேவா…? சும்மா கிடந்தவர்களை உசுப்பேத்திவிட்ட பாரு!
மற்ற நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் தரும் நேரத்தில் உங்களுடைய ரசிகர்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள்.அவர்களுடன் உங்களுடைய கருத்தை பகிருங்கள். உங்கள் அன்பைக் கொடுங்கள். உங்களை பின்தொடரும் ஏராளமான ரசிகர்களில் ஒருவனான நான் கடந்த 3 வருடங்களாக உங்களை பின்தொடர்கிறேன். ஆனால், நீங்கள் ஒரு லைக் கூட இதுவரை போட்டதில்லை. என தனது ஆதங்கம் அத்தனையும் கொட்டி தீர்த்துள்ள அந்த ரசிகருக்கு ஒட்டுமொத்த ரசிகரும் பாராட்டு கூறி வருகின்றனர்.