1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன் என்று டைட்டில். தெலுங்கில் பாரதீயுடு என்று டைட்டில். இந்தியிலும் இந்தியன் என்று டைட்டில் வைக்கலாம்னு நினைச்சாங்க. ஆனால் நடந்ததே வேறு. அங்கு இந்தியன் டைட்டில் நடிகர் சன்னி தியோலிடம் இருந்ததாம்.
தமிழில் வெளியான வல்லரசு படத்திற்கு இந்தியில் அந்தப் பெயரை வைத்தாராம். அப்போது அவர் அந்த டைட்டிலைத் தர வில்லையாம். அதனால் தான் ‘இந்துஸ்தானி’ என்று வைத்தார்களாம். அந்த பெயர் ராசியோ என்னவோ தெரியலை. அங்கு படம் வெள்ளி விழா.
இதையும் படிங்க… STR 48 க்கு சோதனை ஓட்டமா தக் லைஃப்..? சிம்புவுக்கு பிக் ஓபனிங் கொடுக்க உலக நாயகன் திட்டம்
மனிஷா கொய்ராலாவுக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகத் தான் இருந்ததாம். இவரோட கால்ஷீட் கிடைக்காததால் தான் மனீஷா நடித்தாராம். அடுத்ததாக ஊர்மிளா நடிக்க வந்தது எப்படின்னா அதுக்குக் காரணம் ஏ.ஆர்.ரகுமான் தான். இந்த ரோலுக்கு அவர் தான் கரெக்ட்னு சொன்னாராம். அப்போ ரங்கீலாவில் கலக்கி இருந்தார் ஊர்மிளா.
அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒர்க் பண்ணிக்கொண்டு இருந்தாராம். அப்போது அவரது நடிப்பைப் பார்த்து விட்டுத்தான் சிபாரிசு செய்தாராம். முதலில் ஊர்மிளா ரோலில் மகேஷ்பாபுவின் மனைவி நம்ருதி தான் நடிப்பதாக இருந்ததாம். அதன்பிறகு சூட்டிங்கிற்கு ஒழுங்காக ஒரு நடிகை வராமல் இருந்தாராம். அந்த ரோலில் தான் சுகன்யா நடிக்க வந்தாராம்.
இந்தியன் படத்தில் நேதாஜி ஒரு பிளைட் கிராஷ்ல இறந்து விட்டதா பல செய்திகள் வந்தன. அதன்பிறகு லேட்டா அவரு உயிரோடு எங்கோ ஒரு இடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதே போல தான் இந்தப் படத்திலும் கமலுக்கு விமான விபத்து நடந்து அதன்பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியனுக்கு சாவே கிடையாதுன்னு டயலாக் பேசுவார். அந்த வகையில் சேனாதிபதி கேரக்டருக்கும், சுபாஷ் சந்திர போஸ்சுக்கும் தொடர்பு இருப்பதாகப் படத்தில் மறைமுகமாக காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… அந்த பாட்டு இல்லாததால் விஜயகாந்த் படத்தை வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள்! என்ன பாடல் தெரியுமா?
இந்தப் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பொறுப்பைக் கவனித்தவர் வெங்கி. இவர் எத்தனையோ ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால், இந்தியன் தான் சேலஞ்சிங்கா இருந்ததாம். நேதாஜியுடன் கமல் இருப்பது போன்ற அந்தக் காட்சியை எடுத்தது தனக்கு சவாலாக இருந்ததாகவும் அப்போது பேட்டியில் சொன்னாராம்.
படத்தில் வரும் அக்காடான்னு பாடலுக்கும், டெலிபோன் மணி போல் பாடலுக்கும் சில பீட் மியூசிக்குகளை ஹாலிவுட் படங்களில் இருந்து முறைப்படி காபிரைட் வாங்கி ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தினாராம்.
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…