STR  48 க்கு சோதனை ஓட்டமா தக் லைஃப்..? சிம்புவுக்கு பிக் ஓபனிங் கொடுக்க உலக நாயகன் திட்டம்

by sankaran v |   ( Updated:2024-05-10 02:40:06  )
Kamal, STR
X

Kamal, STR

தக்லைஃபில் சிம்புவின் மாஸ் கெட்டப் குறித்தும், எஸ்டிஆர். 48 படம் பற்றியும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தக் லைஃப்பில் மணிரத்னம், கமல் கூட்டணி பற்றி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. வலைதளங்களைத் திறந்தாலே இந்தப் படம் குறித்த அலசல்கள் தான் தொடர்கிறது. கமலுடன் சிம்புவும் இணைந்து நடித்துள்ளதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் படத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க... ஜெயிலர் 2-வுக்கு வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் நெல்சன்!.. ரசிகர்களுக்கு ஃபுல் டிரீட்தான்!..

சமீபத்தில் சிம்புவின் தெறிக்க விடும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஜீப்பில் போலீஸ் கெட்டப்பில் அசத்தலாக வந்த சிம்பு கன்னுடன் குறி வைக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் மணிரத்னத்திற்கு சிம்புவின் மீது தனிப்பட்ட முறையில் ஒரு பாசம், கருணை உண்டு.

STR 48 க்கு கொடுத்த அட்வான்ஸ் பணம் தான் தக் லைஃபிற்கு சிம்புவுக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. எஸ்டிஆர் 48 பெரிய பட்ஜெட். கிட்டத்தட்ட 220 கோடியாம். அந்தப் படத்திற்கு சிம்பு சரியாக வருவாரா என யோசித்து வருகின்றனர். முதலில் தேசிங்கு பெரியசாமி மார்ஷல் ஆர்ட்ஸ் கதையான இதை ரஜினியிடம் சொன்னாராம்.

ஆனால் ரஜினிக்கு தேசிங்கு பெரியசாமியால் பட்ஜெட்டைத் தாண்டி எடுக்க முடியுமா என சந்தேகம் வந்ததாம். கடைசியில் சிம்புவுக்கே வந்தது இந்தக் கதை. இந்தப் படத்திற்காக சிம்பு தாய்லாந்து நாட்டுக்குப் போய் 6 மாதமாக இருந்து மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு உடலை பிட்டாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சிம்புவுக்கான பெரிய ஓபனிங். அதனால் இந்தப் படம் தாங்குமா? அல்லது தயாரிப்பு செலவை குறைக்கலாமா என்றும் ஆலோசனை நடக்கிறதாம். தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நிர்வாகத்தை அக்ஷரா தான் கவனித்து வருகிறாராம்.

STR

STR

ஜெயம் ரவிக்கும், சிம்புவுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தே ஒரு பனிப்போர் இருந்து வருகிறதாம். அதனால் தான் தக் லைஃபில் ஜெயம் ரவி விலகினாரா? அல்லது துல்கர் சல்மான் கேரக்டர் விலகியதால் தான் சிம்பு உள்ளே வந்தாரா? என்று தெரியவில்லை. முதலில் பொன்னியின் செல்வன் படத்தில் கூட சிம்பு நடிப்பதாகத் தான் இருந்ததாம். அப்போ சிம்பு வந்தா நான் வரலன்னு ஜெயம் ரவி சொன்னாராம்.

எஸ்.டி.ஆர். 48 தற்போது மதில் மேல் பூனையாக உள்ளது. இருக்குமா? இருக்காதா என்று. ஒருவேளை தக் லைஃப் சிம்புவுக்கு பெரிய ஹிட்டாகி அவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டால், உடனே எஸ்டிஆர் 48 படத்தை தொடங்கி விடலாம் என்றும் பேசப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story