ஜெயிலர் 2-வுக்கு வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் நெல்சன்!.. ரசிகர்களுக்கு ஃபுல் டிரீட்தான்!..
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றதால் நெல்சனுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை துவங்கினார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் தமன்னா ஒரு குத்தாட்டம் போட்டிருந்தார். அதோடு, மோகன்லால், சிவ்ராஜ் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: கோபியை காலி பண்ண காத்திருக்கும் ராதிகா… நடுக்கத்தில் ஈஸ்வரி… சிக்கிட்டீங்களே!
இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வெற்றியை ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமுமே எதிர்பார்க்கவில்லை சுமார் 600 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. எனவே, படத்தின் இயக்குனர் நெல்சனுக்கும், ரஜினிக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார்.
இந்த படம் வெற்றி அடைந்ததும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஒரு படம் என டேக் ஆப் ஆனார். இதில், வேட்டையன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதோடு, பஹத் பாசில், அமிதாப்பச்சன், ராணா என பேன் இண்டியா அளவில் பலரும் நடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கண்ணதாசன் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் தெரியுமா?
இப்படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஜூன் மாதம் முதல் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி ஒருபக்கம், ஜெயிலர் 2 படத்தின் வேலையிலும் நெல்சன் இறங்கி கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்திலும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு நடிகரை களம் இறக்க நெல்சன் திட்டமிட்டிருக்கிறாராம்.
அனேகமாக மலையாளத்தில் இருந்து மம்முட்டி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படம் முடியும் நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் யோசிப்பதை பார்க்கும் போது இந்த படமும் பேன் இண்டியா படமாக பல மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.