கண்ணதாசன் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் தெரியுமா?

by sankaran v |
Kannadasan
X

Kannadasan

1974ல் கவியரசர் கண்ணதாசனுடன் ஒரு வானொலி நிலையத்தில் பேட்டி எடுத்தார்கள். அப்போது கேள்வி கல்லூரி மாணவர்கள் கேள்வி கேட்டபோது கண்ணதாசன் பதில் சொல்கிறார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர் வைரமுத்து கேள்வி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி கண்ணதாசன் சினிமாத்துறைக்கு எப்படி வந்தார்? அதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் என்று அந்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... ஈரம் சொட்ட சொட்ட சும்மா அள்ளுது!.. தாய்லாந்தில் ஜாலி பண்ணும் விஜே பாரு!..

முதன் முதல்ல 1944ல் ஒரு பத்திரிகையில் சேர்ந்த போது நான் ஒரு எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அங்கு ஒரு விளம்பர அதிகாரியாக வேலை கொடுத்தார்கள். அங்கு உட்கார்ந்து முதன் முதலாக நான் எழுதியது ஒரு கவிதை. அது பாண்டிய நாட்டு கிராமத்துப் பாணியில் தாலாட்டுப் பாடலாக அமைந்து இருந்தது. அதைக் கொண்டு போய் ஆசிரியரிடம் கொடுத்தேன். அதை அவர் பிரசுரித்தார்.

பிரசுரித்ததும் அந்தக் கவிதையை மற்றவர்கள் பாராட்டியபோது கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகரித்தது. அதற்கு முன்னால் கவிதை எழுதுவதற்கான எண்ணம் எனக்கு இயற்கையாகவே உண்டு. அந்த எண்ணத்தை ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அந்த சந்தர்ப்பம் கிடைத்ததும் பலரது பாராட்டுகளும் தொடர்ந்து கிடைத்தது.

அதனால் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்குப் பிறகும் சந்தர்ப்பம் ஒழுங்காக அமைந்த காரணத்தினாலே கவிதை எழுதிக் கொண்டே வந்தேன். சினிமாத்துறையில் வசனம் எழுதும் முயற்சியில் தான் நான் ஈடுபட்டு வந்தேன். அந்த ஆசை தான் அதிகமாக இருந்தது.

ஆனால் ஒரு கம்பெனிக்குப் போன போது வசனம் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பாட்டு எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. உங்களுக்குப் பாட்டு எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள். தெரியும் என்று ஒப்புக்கொண்டேன். அப்படித் தான் பாட்டு எழுதத் தொடங்கினேன்.

எழுத்து எழுத்துக்காகவா சமூகத்திற்காகவா என்று ஒரு மாணவர் கேட்கிறார். அதற்கு எழுத்து எழுத்துக்காகவா, சமூகத்திற்காகவா என்று ஆராய்ந்து கொண்டு ஒருவர் எழுத முடியாது. அவனுக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். அதில் எது சமூகத்திற்குப் பயன்படுகிறதோ அதை சமூகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு எது பயன்படுகிறதோ அதை அவன் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க... விடாமுயற்சி அப்புறம் பாப்போம்!. டீலில் விட்ட அஜித்!.. குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்டார்ட்!..

மற்றவர்களுக்கு எது பயன்படுகிறதோ அதை மற்றவர்கள் பயன்படுத்தட்டும். பெரும்பாலும் சுயதிருப்திக்காகத் தான் எழுதியே ஆக வேண்டும். சும்மா எழுதுவதற்காக எழுதக்கூடாது. கவிஞன் என்பவன் தன்னுடைய அபிப்ராயங்களை வெளியிடுவது தான் முக்கியமே தவிர மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி அவன் கவலைப்படவே முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story