Connect with us
baasha

Cinema History

பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோ டிரைவரா நடிக்க காரணமே வடிவேலுதான்!.. என்னப்பா சொல்றீங்க!..

நடிகர் ரஜினியின் திரைவாழ்வில் மிகவும் முக்கிய படமாக அமைந்தது பாட்ஷாதான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, சரண்ராஜ், ரகுவரன், நக்மா, ஜனகராஜ், விஜயகுமார் என பலரும் நடித்து 1995ம் வருடம் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

மும்பையில் டானாக இருந்த பாட்ஷா அப்பாவின் மரணத்திற்கு பின் சென்னை வந்து ஆட்டோ ஒட்டும் மாணிக்கமாக மிகவும் அமைதியான வாழ்க்கையை ஓட்டி வருகிறார். ஒரு சூழ்நிலையில் லோக்கல் தாதா ஆனந்தராஜை மாணிக்கம் போட்டு பொளக்க அவரின் பிளாஷ்பேக் விரிகிறது.

இதையும் படிங்க: முதல் தமிழ் சினிமா ஹீரோ!.. ரஜினி படம் செய்யாத சாதனை!.. கில்லி படம் உருவான கதை!..

வில்லன் ரகுவரன் ஜெயிலில் இருந்து தப்பித்து பாட்ஷாவை பழிவாங்க வர, மாணிக்கம் மீண்டும் பாட்ஷாவாக மாறி அவரை காலி செய்வதுதான் படத்தின் கதை. இப்படத்தில் பல கூசும்ப்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

baasha

பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுனராக ரஜினி நடித்ததன் பின்னனியில் இருப்பது வடிவேலு என்பது பலருக்கும் தெரியாது. ரஜினியின் எஜமான் படம் வெளியாகிறது. அந்த படத்துடன் வி.சேகர் இயக்கிய ‘வரவு எட்டணா செலவு பத்தனா’ படமும் வெளியானது. அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை பெறுவதை கேள்விப்பட்ட ரஜினி அதற்கு என்ன காரணம் என விசாரிக்க ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பம் குடும்பமாக போய் அப்படத்தை பார்ப்பது தெரிய வருகிறது. அந்த படத்தில் ஆட்டோ ஓட்டுனர் பீட்டர் என்கிற படத்தில் வடிவேலு நடித்திருந்ததுதான் அதற்கு முக்கிய காரணம்.

இதையும் படிங்க: காத்திருந்தவங்க கேனைகளா? பாண்டியராஜனிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி.. இது எப்போ நடந்தது?

உடனே, தானும் ஒரு படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஏனெனில் ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்கள்தான் ரஜினியின் ரசிகர்களாக இருப்பவர்கள். அப்படி உருவான திரைப்படம்தான் பாட்ஷா. ரஜினி எப்படியெல்லாம் யோசிப்பார் என்பதற்கு இதை உதாரணமாக சொல்லலாம்.

ரஜினியின் பேட்ட படம் வெளியானபோது அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியானது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றதை கேள்விப்பட்ட ரஜினி உடனே அந்த படத்தை பார்த்தார். கிராமம் சார்ந்த செண்டிமெண்ட் கதை என்பதால் ஓடுகிறது என புரிந்துகொண்ட ரஜினி உடனே அப்பட இயக்குனர் சிவாவை அழைத்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top