லிவிங்ஸ்டன் நடிப்பில் 100 நாள் ஓடிய படங்கள்! படம் முழுக்க பேசாமல் ஸ்கோர் செய்த ‘சொல்லாமலே’..

by Rohini |   ( Updated:2023-10-12 23:57:46  )
livin
X

livin

Livingston: தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ பேர் சினிமாவிற்குள் வந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல பேரை இந்த சினிமா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இயக்குனராகும் ஆசையில் சினிமாவிற்குள் வந்தவர்தான் லிவிங்ஸ்டன். நடிகர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து அதன் பின் நடிகரானார். பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மூலம் முதன் முதலில் நடிகராக அறிமுகமானார்.

இதையும் படிங்க: பாவம் பூஜா ஹெக்டேவுக்கு படம் தான் கிடைக்கலைன்னா!.. படுக்க இடம் கூட கிடைக்கலையே?..

அந்தப் படத்தில் தனது வில்லத்தனத்தால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனவர் திடீரென சுந்தர புருஷன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல பல விமர்சனத்திற்கு ஆளானார் லிவிங்ஸ்டன். இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்றெல்லாம் கமெண்ட்கள் வந்தன.

இருந்தாலும் தொடர்ந்து விடாமல் படங்களில் ஹீரோவாக நடித்து அந்த படங்களின் மூலமாகவே சரியான பதிலடியை கொடுத்தார் லிவிங்ஸ்டன். அதுவும் சாதாரண படங்கள் அல்ல. 100 நாள் ஓடி சாதனை படைத்த படங்களாகவே அமைந்தன.

இதையும் படிங்க: காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ – அக்.15-ம் தேதி கருத்தரங்கு துவக்கம்…

அந்த வகையில் சொல்லாமலே திரைப்படம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இவருக்குள்ளும் இப்படி ஒரு நடிகரா என மெய்சிலிர்க்க வைத்தார். படம் முழுக்க வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

சுந்தரபுருஷன் திரைப்படம்தான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம். அந்த படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி 100 நாளுக்கு மேல் ஓடச் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக்கினார்.

இதையும் படிங்க: விஜய் மிஸ் பண்ணத தட்டி தூக்கும் ரஜினி!.. தலைவர் 171-ல் பென்ச் மார்க் கிரியேட் பண்ணும் சூப்பர் ஸ்டார்..

அடுத்ததாக விரலுக்கேத்த வீக்கம் என்ற ஒரு குடும்பபாங்கான நகைச்சுவை படத்தில் நடித்து அதுவும் படையப்பா படத்தோடு போட்டி போட்ட படமாகவும் அமைந்தது. படையப்பா படத்தை விட வசூல் சாதனையை பெறும் படமாக இந்தப் படம் அமையப்போகிறது என அந்த நேரத்தில் செய்திகள் வந்ததாம். இருந்தாலும் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருக்கிறது.

அடுத்ததாக என் புருஷன் குழந்தை மாதிரி என்ற திரைப்படமும் 100 நாள் ஓடி சாதனை படைத்த படமாகவே அமைந்தது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக தேவயாணி நடித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் தன் படத்தின் மூலமாக தான் யார் என்பதை நிரூபித்தவர் லிவிங்ஸ்டன்.

Next Story