பாவம் பூஜா ஹெக்டேவுக்கு படம் தான் கிடைக்கலைன்னா!.. படுக்க இடம் கூட கிடைக்கலையே?..

நடிகை பூஜா ஹெக்டே புதிய படங்களில் கமிட் ஆகாத நிலையில், தனது ஓய்வை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பேன் இந்தியா நடிகையாக வளம் வந்த பூஜா ஹெக்டே தொடர்ந்து நான்கு பெரிய தோல்வி படங்களை கொடுத்த நிலையில், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகியுள்ளார்.

அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த அலா வைகுந்த புறமுலோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழில் நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இதையும் படிங்க: விஜய் மிஸ் பண்ணத தட்டி தூக்கும் ரஜினி!.. தலைவர் 171-ல் பென்ச் மார்க் கிரியேட் பண்ணும் சூப்பர் ஸ்டார்..

தெலுங்கில் ராம்சரணுடன் ஆச்சாரியா படத்திலும், பிரபாஸுடன் ராதே ஷியாம் படத்திலும், பாலிவுட்டில் நடிகர் சல்மான்கானுடன் கிசி கா பாய் கிசி கி ஜான் எனும் வீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

ஆனால், பூஜாவின் துரதிருஷ்டம் எந்தப் பெரிய படமும் ஓடாமல் படு தோல்வியை சந்திக்க, அத்தனை பழியும் ஹீரோயின் மேல் கடைசியாக வந்து விழுந்துவிட்டது.

இதையும் படிங்க: அந்த போட்டோ லீக்!… ரவுடி பேபி சூர்யாவை தூக்கிய போலீஸ்!.. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு!…

நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வந்த நிலையில், யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை அந்த படத்திலிருந்து பூஜாவை மகேஷ்பாபு அதிரடியாக நீக்கிவிட்டார்.

தனது அடுத்த படத்தை இன்னும் ஆரம்பிக்காத நிலையில், தனது ஓய்வு நேரத்தை மாலத்தீவில் என்ஜாய் செய்து வருகிறார். கடலில் வாட்டர் பெட்டில் படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஐடியாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், படுக்க இடம் கூட இல்லையா, பாவம் கடல் தண்ணியில் படுத்து ஜுரம் வரப் போகுது என கலாய்த்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CyTbSzzvlmj/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story