11 வருடங்களாக கடும் நஷ்டத்தில் சூர்யாவின் படங்கள்…. கங்குவா படத்துக்கு இத்தனை கோடி இழப்பா?

Published on: November 16, 2024
kanguva
---Advertisement---

ஓடிடியைக் கணக்கில் சேர்க்காமல் சூர்யா நடித்த படங்களில் கடைசியாக அவருக்கு வெற்றிப்படம் வந்து 11 வருடங்கள் ஆகிறது. திரையரங்குகளில் அவருக்கு வெளியான சிங்கம் படம் தான் கடைசியாக அவருக்கு வெற்றியைத் தந்தது. அப்படி என்னென்ன படங்கள் நஷ்டம்னு பார்க்கலாமா…

அஞ்சான்

அஞ்சான் படம் மிகப்பெரிய நஷ்டம். 2014ல் லிங்குசாமி தயாரித்து இயக்கிய படம். சூர்யா, சமந்தா, உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

surya 2
surya 2

மாசு என்கிற மாசிலாமணி

மாசு என்கிற மாசிலாமணி படம் அட்டர் பிளாப்.  வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சூர்யா, நயன்தாரா நடித்த படம். சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்த படம்.

Also read: உங்க புருஷர் பண்ணதை மறந்துட்டீங்களா நயன்!.. NOC மறுக்கப்பட்டதன் உண்மை பின்னணி…

ஆரம்பத்தில் மாஸ் என்று பெயரிடப்பட்டு இருந்தது. தமிழில் பெயர் என்றால் வரிவிலக்கு என்றதால் மாசு என்கிற மாசிலாமணி என்று பெயர் மாற்றப்பட்டது.

திரைக்கதை நன்றாக இருந்ததால் 24 படம் சிறிதளவு நஷ்டம். விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம். சூர்யா, நித்யாமேனன், சமந்தா உள்பட பலர் நடித்துள்ளனர். இது சூர்யாவின் சொந்தப் படம்.

ஹரி இயக்கத்தில் வெளியான படம் சிங்கம் 3. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்த படம். இதுவும் ஞானவேல் ராஜா தயாரித்த படம் தான். 2017ல் வெளியானது. இந்தப் படமும் நஷ்டம் தான்.

 தானா சேர்ந்த கூட்டம்

2018ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பிளாப் ஆனது.

என்ஜிகே

2019ல் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் என்ஜிகே. சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத்திசிங் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் படு பிளாப் ஆனது.

காப்பான்

கேவி.ஆனந்த் இயக்கத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, லைகா நிறுவனம் தயாரித்த படம் காப்பான். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். சூர்யா, மோகன்லால், ஆர்யா இணைந்து நடித்த படம். 2019ல் வெளியான இந்தப் படம் பயங்கரமான நஷ்டத்தைச் சந்தித்தது.

எதற்கும் துணிந்தவன்

ET
ET

எதற்கும் துணிந்தவன் படத்தைப் பொறுத்தவரை சேட்டிலைட் உரிமையால் தப்பியது. இல்லாவிட்டால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து இருக்கும். பாண்டிராஜ் இயக்கத்தில் 2022ல் வெளியான இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

Also read: மருமகள் முதல் கயல் வரை… சன் டாப் 5 சீரியல்களில் இன்றைய எபிசோட் இதுதான்..

சூர்யா, வினய், பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். 2021ல் இந்தப் படம் வெளியானது.

கங்குவா

கங்குவா படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 350 கோடி பட்ஜெட்டில் சமீபத்தில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. குறைந்தபட்சம் 180 கோடி இழப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.