Connect with us

1960ல் வெளியான சூப்பர்ஹிட் படங்கள்- ஒரு பார்வை

Cinema History

1960ல் வெளியான சூப்பர்ஹிட் படங்கள்- ஒரு பார்வை

நாம் கனமான கதை அம்சம் கொண்ட படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்பினால் தமிழ்சினிமாவில் கொஞ்சம் அல்ல…நிறையவே பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். அந்தப்படங்களைப் பார்த்தோமானால் நாம் படத்துடன் ஒன்றி விடுவோம். பாடல்கள் இடைச்சொருகலாக ஒருபோதும் இருக்காது.

கதையுடன் கலந்ததாகவே இருக்கும். இந்த வரிசையில் நாம் ரசிப்பதற்காக 1960ல் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் ரசனைக்காக இதோ…

இரும்புத்திரை

1960ல் வெளியான இந்தப்படத்தை அக்கால ரசிகர்கள் ரொம்பவே ரசித்துப் பார்த்தனர். எஸ்.எஸ்.வாசன் இயக்கியுள்ளார். சிவாஜிகணேசன், வைஜெயந்திமாலா, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்கராவ், கே.ஏ.தங்கவேலு, சரோஜாதேவி, பண்டரிபாய் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் தேன் கலந்தவை.

இந்தப்படத்திற்குப் பெயர் வைத்தது ஒரு ரசனைக்குரிய விஷயம்தான். ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரித்தது. அப்போது படத்திற்குப் பெயர் இடவில்லை. என்ன பெயர் வைக்கலாம் என்று அவர்கள் யோசித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப்படத்திற்கான பெயரை நம் ஊழியர்களைக் கொண்டே வைக்கலாமே என்று எண்ணினர். அதன்படி அவர்களிடம் கருத்து கேட்டனர்.

அதன்படி கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட கடிதங்கள் அவர்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்து கடைசியில் இவர்கள் தேர்வு செய்த தலைப்பின் பெயர் தான் இரும்புத்திரை. படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் வைஜெயந்திமாலாவின் அம்மா தான் வசுந்தரா தேவி.

இந்தப்படத்திலும் இதே போல் தாய்-மகள் கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளனர். நெஞ்சில் குடியிருக்கும், ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய், கையில வாங்கினேன் பையில போடலே, நன்றி கெட்டமனிதருக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.

களத்தூர் கண்ணம்மா

kalathur kannamma kamal

பீம்சிங் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம் களத்தூர் கண்ணம்மா. ஜெமினிகணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, தேவிகா, மனோரமா இவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பவர் கமல்ஹாசன்.

முதல் படத்திலேயே இவருக்கு தேசிய விருது கிடைத்தது. சுதர்சனம் இசை அமைத்துள்ளார். கண்களின் வார்த்தைகள், சிரித்தாலும், ஆடாத மனமும், அருகில் வந்தால், அம்மாவும் நீயே, உன்னைக் கண்டு மயங்காத ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கைராசி

1960ல் வெளியாகி பட்டையைக் கிளப்பிய படங்களுள் இதுவும் ஒன்று. கே.சங்கர் இயக்கத்தில் கோவர்தனம் இசையில் சக்கை போடு போட்ட படம். காதல் மன்னன் ஜெமினிகணேசன், சரோஜாதேவி, கே.ஏ.தங்கவேலு, எம்.ஆர்.ராதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கண்ணும் கண்ணும் பேசியதும், காதலென்னும் ஆற்றினிலே, அன்புள்ள அத்தான் வணக்கம், காத்திருந்தேன் காத்திருந்தேன், ஊருமில்லை நாட்டிலே ஆகிய மனது மறக்காத பாடல்கள் நிறைந்த படம் இது.

கைதி கண்ணாயிரம்

kaithi kannayiram Manohar

1960ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். மனோகர் கதாநாயகனாக நடித்த படம். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குள்ளானது.

அற்புதமான நடிப்பை மனோகர் வெளிப்படுத்தியிருப்பார். தங்கவேலு, ஈ.வி.சரோஜா வீரப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். கொஞ்சி கொஞ்சி பேசி, சுண்டெலிக்கும், மானம் நெஞ்சிலே உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாவை விளக்கு

1960ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் சோமு. கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப்படமானது அகிலன் எழுதிய பாவை விளக்கு என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.

சிவாஜிகணேசன், எம்.என்.ராஜம், சௌகார் ஜானகி, பண்டரிபாய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் மகாகவி பாரதியார் எழுதிய மயங்கியதோர் நிலவினிலே என்ற பாடல் இடம்பெற்றது. காவியமா நெஞ்சில் ஓவியமா என்ற சி.எஸ்.ஜெயராமனின் காந்தக்குரல் பாடல் இடம்பெற்றதும் இந்தப்படம் தான்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top