ஒரே வருட இடைவெளியில் 2 முரண்பட்ட பாடல்கள்... கண்ணதாசன் இப்படி எழுத என்ன காரணம்?

ஒரே கருத்து. ஆனால் 2 வேறுபட்ட பாடல்கள். முரண்பட்டதாக உள்ளதோ என்று எண்ணத்தோன்றும். கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் கவியரசர் சொன்னது சரிதான் என்றே எண்ணத் தோன்றும். வாங்க அது என்னென்ன பாடல்கள்னு பார்ப்போம்.

பீம்சிங் இயக்கத்தல் சிவாஜி நடித்த பாவமன்னிப்பு படம். இந்தப் படத்தில் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்ற பாடல். இந்துவாகப் பிறந்து இஸ்லாமியராக வளர்கிறார் சிவாஜி. சைக்கிளில் குழந்தையை வைத்தபடி பாடிச் செல்கிறார். ஆரம்பத்தில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. வான் மதியும், மண்ணும், கொடியும், சோலையும் நதியும் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறிவிட்டான் அப்படின்னு சொல்வார் கண்ணதாசன்.

இதையும் படிங்க... பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயன்ற எம்ஜிஆர்… தோல்வியில் முடிய இதுதான் காரணமா?...

மற்ற எதற்கும் மதம் இல்லை. மனிதனுக்குத் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சரணத்தில் நிலை மாறினால் குணம் மாறுவான், நீதியும் நேர்மையும் பேசுவான். வசதி வந்து விட்டால் என்ன வேணாலும் சொல்வான். பொய் நீதியும், நேர்மையும் பேசுவான் என்று சொல்லி இருப்பார் கவியரசர்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று வரிகள் எழுதி கடைசியில் எதனைக் கண்டான் மனம்தனை படைத்தான் என்று முடித்து இருப்பார் கண்ணதாசன். அன்று சென்சாரில் பிரச்சனை இருந்ததால் படத்தில் எதனைக் கண்டான் பணம்தனை படைத்தான் என்று மாற்றி விட்டார். 1961ல் வெளிவந்த மறக்க முடியாத பாடல் இது.

1962ல் மனிதன் மாறவில்லை என்ற படத்தில் ஒரு பாடல் எழுதியிருப்பார். ஜெமினிகணேசன் நடித்தது. கண்டசாலா இசை அமைத்துள்ளார். வசதியான வீட்டுக்காரரான ஜெமினிகணேசன் ஏழை மாதிரி நடித்து சாவித்திரியை திருமணம் செய்து தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். சீர்காழி கோவிந்தராஜனும், பி.லீலாவும் இணைந்து பாடியுள்ளனர்.

2 songs

2 songs

காலத்தை மாற்றினான். கட்சியை மாற்றினான். கோலத்தை மாற்றினான். கொள்கையை மாற்றினான். ஆனால் மனிதன் மாறவில்லை. அவன் மயக்கம் தீரவில்லை என்று பாடல் அடிகள் வரும். காட்டு நிலங்களை மாற்றி விட்டான். அவன் கரடி, புலியையும் அடக்கி விட்டான். இமயத்தில் கொடியை ஏற்றி விட்டான். இந்த வானில் உலகை சுற்றி விட்டான். ஏனோ மனிதன் மாறவில்லை. அவன் மயக்கம் தீரவில்லை என்று வரிகள் வரும்.

இடையில் வரும் வரிகளில் கையளவே தான் இதயம் வைத்தான். அதில் கடல் போல் ஆசை வைத்தான். மெய்யும் பொய்யும் கலந்து வைத்தான். அதில் மானிட தர்மத்தை மறைத்து வைத்தான் என்று அழகாக எழுதியிருப்பார் கவியரசர்.

ஆனால் எந்த வகையில் மனிதன் மாறவில்லை என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை. அதை ரசிகர்களின் மனநிலைக்கே விடுகிறார். எதில் மாறவில்லை என்றால் பேராசை, மத மோதல், ஜாதீயத்தில் மாறாமல் இருக்கிறான் என்பதையே சொல்லாமல் சொல்கிறார் கவியரசர்.

இதையும் படிங்க... கடைசி 10 படங்கள்.. வசூல் சக்கரவர்த்தி யார்?!.. சூப்பர்ஸ்டாரா?.. தளபதியா?!. வாங்க பார்ப்போம்!..

மேற்கண்ட 2 பாடல்களிலும் ஏன் மாறிவிட்டான், மாறவில்லை என்றால் இரண்டும் ஒரே ரகம் தான். அங்கு இயற்கை மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். இங்கு இயற்கையை இவன் மாற்றிவிட்டான். ஆனால் இவனது திமிர், அகங்காரம் மாறவில்லை என்று எழுதியுள்ளார். இரண்டுமே மனித வாழ்க்கையைப் பற்றித் தெளிவாகச் சொல்லும் பாடல்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story