ரஜினியின் புதுப்படத்தில் 2 டெரரான வில்லன்களா? வீரா போல மாஸ் காட்டுமாம் வேட்டையன்..!

by sankaran v |
VV
X

VV

ரஜினியின் 171வது படத்துக்கு அதாவது கூலி பட சூட்டிங்கில் பயங்கர கெடுபிடிகளாம். பயங்கர பாதுகாப்புடன் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகிறது என்கிறார் பிரபல பத்திரிகையாளர் தேனி கண்ணன். இதுகுறித்து மேலும் அவர் தனது யூடியூப் சேனலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் எந்தத் தகவலும் வெளியில் போகக்கூடாதுன்னு ரஜினி ரொம்பவே ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாராம். இந்தப் படத்திற்கு புதிதாக 2 வில்லன்களைத் தேர்வு செய்து சின்ன மேக்கப் டெஸ்ட் வைத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

Koolie

Koolie

லோகேஷ் கனகராஜோட டீம் பாதுகாப்புக்கான வேலைகளைப் பிரித்துப் பிரித்து செய்து வருகிறார்களாம். அண்ணாமலை படத்தில் எவ்வளவு ஆக்ஷனைக் கொடுத்தாரோ அதுக்குக் கொஞ்சமும் குறையாமல் அதே சுரேஷ் கிருஷ்ணாவோடு வீரா என்ற மெலடி கலந்த ஹியூமர் படத்தையும் கொடுத்து அசத்தினார். அதன்பிறகு ரஜினி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த அதிரடி படம் தான் பாட்ஷா.

இந்த கேப் எப்படி வீராவுக்குக் கிடைச்சதோ, அதே போல தான் ஜெயிலருக்கும் கூலிக்கும் இடையில் ஒரு மென்மையான கதை தான் வேட்டையன். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ரஜினி விரல்நுனியில் தெரிந்து வைத்து இருப்பார். படம் வெளியாவதற்கு முன் டெக்னீஷியன்களுடன் சேர்ந்து பார்க்கும்போது யதார்த்தமாக இருப்பாராம். ஆனால் ரசிகர்கள் பார்க்கும்போது ரொம்பவே பதட்டமாக இருப்பாராம்.

இதையும் படிங்க... ஒன்னு நீ முன்ன வா.. இல்ல என்ன விடு! ரிலீஸ் தேதியில் ஆடுபுலி ஆடும் ‘ராயன்’ மற்றும் ‘இந்தியன் 2’

ஒவ்வொரு படத்திற்குமே புதுப்படம் பண்ணுவது போல பதட்டத்தில் இருப்பாராம். பிரிமியர் ஷோ முடிந்ததும் ஒவ்வொருவரிடமும் போன் போட்டு ஒவ்வொரு காட்சியாகச் சொல்லிச் சொல்லி இதெப்படி இருக்கு? அதெப்படி இருக்குன்னு கேட்பாராம். இதுதான் அவரை சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் உட்கார வைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய நடிகர் அதுவும் ஒரு சூப்பர்ஸ்டார் இத்தனை ஆண்டுகாலம் நடித்தும் இன்னும் முதல் படத்திற்கு உரிய ஆர்வத்துடன் அந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களின் ரிசல்ட்டுக்காக இவ்வளவு சிரத்தைக் காட்டுகிறார் என்பது வியப்புக்குரிய விஷயம் தான்.

Next Story