Connect with us

Cinema History

2021ன் சிறந்த தமிழ்ப்பட பாடல்கள்

ஆண்டுதோறும் எண்ணற்ற சினிமாப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒரு சில தான் நெஞ்சில் நிற்கின்றன. அதுபோல்தான் பாடல்களும். ஒரு சில மட்டும் தான் நெஞ்சில் நிற்கும். அதுவும் இந்த கால பாடல்கள் அந்தக்கால பாடல்களைப் போல நீண்ட நாள்கள் மனதில் நிற்பதில்லை என்றே சொல்லலாம்.

என்றாலும் ஒரு சில பாடல்கள் தற்போதைய இளசுகளுக்கு பிடிக்கும் யுக்தியைக் கையாண்டு எழுதி இசை அமைக்கப்படுவதால் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இவை படத்தையும் பார்க்கத் தூண்டி விடுகின்றன. அப்படிப்பட்ட ட்ரெண்ட்டான தமிழ்ப்பட பாடல்கள் 2021ல் என்னென்ன வந்துள்ளன என்று பார்க்கலாம்.

தட்டான் தட்டான்….

Karnan Dhanush

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ளது இந்தப்பாடல். தனுஷின் கலக்கலான நடிப்பில் வெளியான இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்கி உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

தட்டான் தட்டான் வண்டி கட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் என்ற இந்தப்பாடலை யுகபாரதி எழுத தனுஷ_ம், சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர். இவர்களுடன் இணைந்து மீனாட்சி இளையராஜாவும் பாடியுள்ளார்.

2021ல் வெளியான சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்தது.

ஓ சொல்றியா மாமா…

Samantha

புஷ்பா படத்தில் தான் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலை விவேகா எழுத, ஆண்ட்ரியா ஜெராமையா பாடி அசத்தி உள்ளார். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, மந்தண்ணா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளம் ரசிகர்கள் மத்தியில் தற்போது ட்ரெண்ட்டான இந்தப்பாடல் செல்போன் ரிங்டோனாகவும் உள்ளது. இந்தப்பாடலில் இடம்பெற்ற விளக்க அணைச்சா போதும் மாமா எல்லா வெளக்குமாறும் ஒண்ணுதாங்க என்ற வரிகள் பாப்புலரானது. சமந்தா இந்தப்பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

எந்தன் நண்பியே நண்பியே…

Arya and Sayisha with Teddy

டி.இமான் இசையில் வெளியான இப்பாடல் இடம்பெற்ற படம் டெடி. மதன் கார்க்கியின் வரிகளில் இந்தப் பாடல் 2021ன் திரைப்பட பாடல் வரிசையில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் பாடி அசத்தியுள்ளார். ஆர்யா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெடி என்ற கரடிக்குட்டி பொம்மையுடன் சுற்றித்திரிந்து ஆடிப்பாடும் ஆர்யாவின் இந்தப்பாடல் சிறு குழந்தைகளையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. எந்தன் நண்பியே நண்பியே எனை திறக்கும் அன்பியே என்ற இந்தப் பாடலின் வரிகள் தந்தை வைரமுத்துக்கு தப்பாமல் பிறந்த மதன் கார்கியின் வைரமான வரிகள் என்பதை பறைசாற்றுகின்றன.

யாரையும் இவ்ளோ அழகா

Sulthan Karthi

சுல்தான் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப்பாடலை விவேகா எழுதியுள்ளார். விவேக்-மெர்வின் இசை அமைப்பில் வெளியான பாடலை மெர்வின் சாலமோன், சிலம்பரசன் ஆகியோர் பாடி உள்ளனர்.

இந்தப்பாடல் இந்த ஆண்டின் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது. யாரையும் இவ்ளோ அழகா பாக்கல, உன்னை போல் எவளும் உசுர தாக்கல என்ற இந்தப்பாடல் சிலம்பரசனின் குரலில் கார்த்தி நடிக்க கேட்பதற்கு இனிமையாக உள்ளது.

நாங்க வேற மாதிரி

வலிமை படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது. தல அஜீத் நடித்த இந்தப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இன்னிசையில் அவரே பாட வெளியான இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன். நாங்க வேற லெவல் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம்.

இது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே பாணியில் இடம்பெற்ற இந்தப் பாடல் தான் நாங்க வேற மாறி….என்ற இந்தப்பாடல் தல அஜீத்தின் ஓபனிங் சாங்காக இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலில் இடையே உன் வீட்டை முதல் பாரு…அட தானாவே சரியாகும் உன் ஊரு…கருத்து சொல்ல நான் ஞானி இல்ல…ஆனா எடுத்துச் சொன்னா எந்த தப்பும் இல்ல..!

நாளைக்கு நிம்மதியா நீ இருக்க இன்னைக்கு இற்கி செதுக்கிடனும்..உன் எண்ணத்த அழகா நீ அமைச்சிக்கிட்ட எல்லாமே அழகாகும்…சரியாகும்! வாழு வாழ விடு அவ்ளோ தான் தத்துவம்…அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்! கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ…கண்டுப்பிடிச்சுட்டா…தகதகனு மின்னலாம்…! என்ற தத்துவமும் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top