இதுவரையிலும் ரசிகர்களைக் கவர்ந்த 2022 ல் வெளியான படங்கள் - ஓர் பார்வை
2022ல் வெளியான படங்களைப் பார்த்தால் நமக்கு ஒரு பிரம்மாண்டமாகவே இருக்கும். பல படங்கள் இப்படி தான் வந்து கொண்டுள்ளன. ஒரு சில படங்களைத் தவிர...தற்போது வர உள்ள விக்ரம், பொன்னியின் செல்வன் - 1 படங்களும் இந்த ரகங்கள் தான். இனி இந்த ஆண்டில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சில படங்களைப் பார்ப்போம்.
வலிமை
தல அஜீத்தின் இந்தப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஓரளவு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அஜீத்குமாருடன் கார்த்திகேயா, கும்மகொண்டா, ஹ_மா குரோஷி, குர்பானி ஜட்ஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். இந்தியக் காவல்துறை அதிகாரியாக அஜீத் நடித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர்
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். என்.டி.ராம ராவ், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியாபட், ஸ்ரேயா சரண், சமுத்திக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டது. எம்.எம்.கீரவாணியின் இசை மிரட்டியது. படத்தில் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க காவிய படமாகவும் அமைந்தது.
கேஜிஎப் 2
கன்னடத்தில் வெளியான இந்த ஆக்ஷன் பீரியட் படமானது தமிழில் டப் செய்யப்பட்டது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷ், சஞ்சய் தத், ரவீனா டான்டன், ஸ்ரீனிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் காட்சிக்கு காட்சி படுபயங்கர ஆக்ஷன்கள் வந்து நம்மை மிரட்டும். சூப்பர் ஹிட் சண்டைக்காட்சிகள் நிறைந்தது. ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார். வசூலை ஈட்டிய படம். இதன் இரு பாகங்களும் அதிகளவிலான ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப்படத்திற்கு சூப்பரான இசையைக் கொடுத்துள்ளார். விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதனால் தான் படமும் ஹிட்டாகிறது. அவருக்கும் மாஸான ரசிகர்கள் வட்டாரம் கிடைக்கிறது. அடுத்து பெரிய பேனரில் இவர் நடித்த படம் விரைவில் வர உள்ளது. அதுதான் விக்ரம். மாஸ்டர் படத்திற்குப் பிறகு இவர் வில்லனாக நடிக்க உள்ள இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்காகவே படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவதுண்டு.
டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள நகைச்சுவை படம் டான். சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்.
சமுத்திரக்கனி, சூரி, பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த படம் இது. தற்போது பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.