2023- இல் அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகர்கள்!.. அடேங்கப்பா லிஸ்ட்ல இவரு இருக்காரா!..

இன்னைக்கு நாம பார்க்க இருக்கிறத டாபிக் 2023 அதிக சம்பளம் வாங்கும் ஐந்து முன்னணி நடிகர்கள்.

இன்றைய சினிமா உலகில் நிறைய நடிகர்கள் தங்களின் சம்பள உயர்வை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். ஏனென்றால் அவர்களின் ரசிகர்களை பொறுத்தே சம்பள உயர்வையும் ஏற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பற்றிய வெளியீட்டை ஒரு முக்கிய நாளிதழ் வெளியிட்டுள்ளது அதனை பின்வருமாறு பார்ப்போம்.

இந்த நிலையில் ஐந்தாவதாக அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இருப்பது நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியதை அடுத்து நடிகர் தனுஷின் சம்பள உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இருந்தாலும் நானே வருவேன் திரைப்படம் ஒரு சுமாரான திரைப்படம் என்பதாலும் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

dhanush

dhanush

மேலும் இவர் நடித்த அசுரன், வடசென்னை போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் இவருக்கு மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆதலால் தற்சமயம் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தமிழ் சினிமாவின் முன்னேறி இருக்கிறார். இவரின் தற்போது வாங்கும் சம்பளம் 50 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாலாவது இடத்தில் அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆன கமலஹாசன் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடையே நீண்ட நாட்களாக பெரிய அளவிற்கு வெற்றி கிடைக்காமல் தோல்வியை சந்தித்த நடிகராகவே காணப்பட்டிருக்கிறார்.

Kamal

Kamal

இந்த நிலையில் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் சேர்ந்து விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரது மார்க்கெட் நம்ப முடியாத அளவிற்கு உச்சத்தில் உயர்ந்துள்ளது. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தற்சமயம் வாங்கும் சம்பளத்தின் விலை எவ்வளவு தெரியுமா 60 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் விக்ரம் படத்தின் வசூல் மட்டும் 400 கோடி என்பதால் இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது அனைத்து மொழி திரைப்படங்களிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இதையும் படிங்க-முதல் படத்தையே முடிக்க முடியாமல் கஷ்டப்பட்ட இயக்குனர்!.. கை கொடுத்த இளையராஜா!.. என்ன மனுசன்யா!.

அடுத்ததாக நாம பார்க்க இருக்க ஹீரோ தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு என்று பார்ப்போம். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் திரை துறையில் பணியாற்றி பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக போராடி வருகிறார்.அந்த வகையில் இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தற்சமயம் வரை தோல்வியை சந்தித்து வருகிறது.

jailer

jailer

இவர் நடித்த காலா, பேட்ட, அண்ணாத்தே தர்பார் 2.0 போன்ற திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் இவரது மார்க்கெட் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் இவரது ரசிகர்கள் அனைத்து மொழிகளிலும் இருப்பதன் மூலம் இன்று வரை இவருக்கு சம்பளம் குறையாமல் இருக்கிறது என்றால் அதற்கு அவருடைய உழைப்பு தான் காரணம். தற்சமயம் இவர் 75 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததா நம்ம பார்க்க இருக்க நடிகர் நடிகர் அஜித் அவர்கள் திரைத்துறையில் மிகவும் கஷ்டப்பட்டு இன்று தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக வீரம் விவேகம் வலிமை வேதாளம் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றதன் மூலம் இன்று வரை தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் இவரின் சம்பளம் 80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith

Ajith

அடுத்ததாக நாம பார்க்க இருக்க ஹீரோ தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய மொழி சினிமா ரசிகர்களாலும் பெரிதாக கவரப்பட்ட ஒரு தமிழ் நடிகர் விஜய் அவர்கள். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நடனத்தின் மூலமும் வசீகரமான நடிப்பாலும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்.

இந்த நிலையில் இவரது லியோ திரைப்படம் இன்னும் சற்று நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர் நூறு கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு தமிழ் நடிகர் இவ்வளவு சம்பளம் வாங்குவது இதுவே முதல்முறையாகும்.

Vijay

Vijay

இதையும் படிங்க- நான் செஞ்ச வேலையால் அண்ணாவும், அப்பாவும் வீட்டை விட்டே போயிட்டாங்க!.. நளினி வாழ்வில் இவ்வளவு சோகமா!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it