2025 கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடத்தை பொருத்தவரை தமிழ் சினிமாவிற்கு சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த வருடம் நிறைய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். எனவே 2026 தங்களுக்கு கை கொடுக்கும் என சினிமா உலகினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் 2026ம் வருடம் என்னென்ன முக்கிய படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
2026 துவக்கத்திலேயே அதாவது பொங்கல் விருந்தாக விஜயின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும், சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதியும் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிவிட்டாலே 2026 நன்றாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் செண்டிமெண்டாக கருதுகிறார்கள்.

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த பல மாதங்களாக கிடப்பில் இருக்கும் LIK திரைப்படம் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு டைம் மெஷின் கலந்த சயின்ஸ் பிக்சன் கதை என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் 2026 மார்ச் மாதம் வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததால் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அதேபோல் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரின் 46வது திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் மே மாதம் வெளியாகியுள்ளது. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் ஜூன் மாதமும், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அவரின் 54வது திரைப்படம் ஜூலை மாதமும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் 2026 தீபாவளிக்கும் வெளியாகியுள்ளது.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அரசன், சூர்யா தற்போது நடிக்க துவங்கியுள்ள அவரை 47 வது திரைப்படம் மற்றும் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படம் ஆகிய படங்களும் 2026 இரண்டாம் பாதியில் வெளியாகும் என தெரிகிறது. இதில் எந்தெந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அதிக வசூலை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.