ஒரே நாளில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்... எப்படி நடந்ததுனு ரகசியம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் சுயம்வரம். இப்படம் கின்னஸ் சாதனையும் புரிந்தது. இதன் பின்னால் இருந்த ரகசியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
ஒரு சில பெரிய நடிகர்களை வைத்து படமெடுப்பதே பெரிய கஷ்டமான வேலை. அதிலும் அந்த காலத்தில் முன்னணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நடிகர் மற்றும் நடிகைகளை கொண்டு இயக்கப்பட்டது சுயம்வரம். இப்படம் அதிக வேகமாக எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது. தொடர்ந்து நிறைய முன்னணி நடிகர்களை கொண்டு இயக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையும் கிடைத்தது.
இப்படத்தின் அறிவிப்பு 1999ம் ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்த யோசனையை முதலில் துவங்கியவர் கிரிதர்லால். முதலில் இப்படத்தினை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. பின்னர் இவரே இப்படத்தினை தயாரிக்க முடிவெடுத்தார். ஜெ. பன்னீர், ஏ.ஆர். ரமேஷ், கேயார், இ.ராமதாஸ், அர்ஜூன், குரு தனபால், லியாகத் அலிகான், ஆர். சுந்தராஜன், செல்வா, கே. சுபாஷ், சுந்தர் சி, சிராஜ், கே.எஸ்.ரவிகுமார், பி. வாசு என 14 இயக்குனர்கள் இயக்கி இருந்தனர்.
இதையும் படிங்க: ரஜினி படத்தை எடுக்க வேண்டிய கே.எஸ்.ரவிக்குமார்.. இப்போ யாரை இயக்குகிறார் பாருங்க… வருத்தப்பட்ட ரசிகர்கள்…
19 அசோசியேட் இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 36 உதவி கேமராமேன்கள், 14 ஹீரோ, 12 ஹீரோயின்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். எல்லாரிடமும் ஒரு நாள் மட்டும் கால்ஷூட் வாங்கப்பட்டு இருந்தது. 1999ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கிய ஷூட்டிங் அடுத்த நாள் காலை 6 மணிக்கு முடிந்தது.
ஒவ்வொரு இயக்குனருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் நடிகர்கள் வந்து நடித்து விட்டு இன்னொரு காட்சிக்கு நடிக்க சென்று விடுவார்களாம். மணமக்களை தேர்வு செய்யும் காட்சியினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தின் முக்கியமான காட்சியே இது தான்.
மேலும், பி.வாசு இயக்கியது பிரபு மற்றும் ஐஸ்வர்யா பகுதிகளை தானாம். அங்கு சில பொருட்களும், துணை நடிகர்களும் சரியாக இல்லாமல் போக ஷூட்டிங் காலதாமதமாகி இருக்கிறது. உடனே தனது ஸ்டைலில் சில மாற்றங்களை செய்து பி.வாசு முடித்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் நடிகர்கள் தங்கள் காட்சிக்கான டப்பிங்கையும் பேசி முடித்தனர். சில டப்பிங் கலைஞர்களை வைத்து மூன்று நடிகைகளுக்கு டப்பிங் பேசவும் வைத்திருக்கிறார்கள். இப்படி பல போராட்டங்களுக்கு இடையே இப்படம் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட கின்னஸ் சாதனையையும் தட்டியது.