ரஜினி படத்தை எடுக்க வேண்டிய கே.எஸ்.ரவிக்குமார்.. இப்போ யாரை இயக்குகிறார் பாருங்க… வருத்தப்பட்ட ரசிகர்கள்…

0
511

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் இயக்குனர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் தான். அந்த அளவுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களை கொடுத்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் , சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த சமயம் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை தொடர்ந்து நெல்சன் இந்த படத்தை இயக்குவாரா என்று பலர் கேள்வி எழுப்பினார்.

மேலும், படத்தின் திரைக்கதை பணிகளை  கே.எஸ்.ரவிக்குமார்தான் மேற்கொள்கிறார் என்றும் தகவல் கசிந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வெளியான டைட்டில் போஸ்டரில் எழுத்து இயக்கம் நெல்சன். ஜெயிலர் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி விட்டது.

இருந்தும் அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ரஜினி நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கே.எஸ்.ரவிகுமார் அடுத்ததாக இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பரவலாக கிசுகிசுக்கப்பட்டபடி ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளாராம். அதில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்களேன் – தளபதி விஜய் நடிப்பில் கில்லி -2 வருமா.? லோகேஷின் பதிலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்…

இந்த தகவலை கேட்ட ரஜினி ரசிகர்கள், சற்று வருத்தம் அடைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்கி தமிழில் பெரிய கம்பேக்  கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பியை இயக்க கே.எஸ்.ரவிக்குமார் ஆயத்தம் ஆகி விட்டாரே, பிறகு எப்போது ரஜினி படத்தை இயக்குவார்? நின்றுபோன ராணா திரைப்படம் எப்போது உருவாகும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

google news