இரண்டாம் பாகத்தில் சோடை போன படங்கள் - சிறப்புப் பார்வை

ஒரு ஹிட்டான படத்தின் 2ம் பாகம் வெளியாகும்போது அது பெரும்பாலும் சோடை போய்விடுகிறது. காரணம் என்னவென்றால் முதல் படத்தில் தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். பெரும் ரசனையுடனும் பார்ப்பான் ரசிகன். 2ம் பாகத்தை அந்த அளவிற்கு உன்னிப்பாக கவனிக்க மாட்டான்.

விதிவிலக்காக ஒரு சில படங்கள் ஹிட் ஆகிவிடுகின்றன. முனி, முனி 2, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என ராகவா லாரன்ஸ்தான் இப்படி தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்துவருகிறார். ஆனால், சோடை போன படங்கள் தான் ஏராளம். உதாரணத்திற்கு ஆயிரத்தில் ஒருவன் படம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் உருவான சூப்பர்ஹிட் படம்.

2.0 Rajni, Aksahykumar

இந்தப்படத்தின் பெயரில் கார்த்தி நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இதுவும் ஒரு அளவிற்கு ரசிக்கலாம் என்றிருந்தது. ஆனால் அதன் 2ம் பாகமும் வருகிறதாம். ஹிட்டாகுமா என பார்க்கலாம். அதே போல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் எந்திரன். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2ம் பாகம் 2.0 அந்த அளவிற்கு ஹிட்டாகவில்லை.

billa 2 Ajithkumar

பில்லா படம் ரஜினிகாந்த் நடித்தது. அது சக்கை போடு போட்டது. அதன்பின்னர் அஜீத் நடித்தது பில்லா. அதுவும் சூப்பர்ஹிட்டானது. அதன்பிறகு வெளியானது பில்லா 2. இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

அந்தவகையில் கமல் படத்தில் விஸ்வரூபம் ஹிட்டான அளவு விஸ்வரூபம் 2 ஹிட்டாகவில்லை. இப்போதோ தொடர்ந்து கமலுக்கு 2ம் பாகம் வரும்போல் தெரிகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவையேனும் வெற்றி பெறுமா என்று?

விக்ரம் பழைய படம் ஒரு அறிவியல் படமாக கமலுக்கு வெளியானது. விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. தற்போது அதே பெயரில் ஆக்ஷன் படமாக விக்ரம் விரைவில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் கமல் உடன் நடிக்கிறார்கள். பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது. ஏப்ரல் மாதம் இந்தப்படம் திரைவிருந்தாக வருகிறது.

இந்தியன் 2 படம் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாபநாசம் 2 படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தேவர் மகன் 2 படம், சபாஷ் நாயுடு படம் வெளியாக உள்ளது.

bahubali 2

பாகுபலி சீக்குவல்ஸ்...பாகுபலி 2வாக வந்தது. சீக்குவல்ஸ் என்றால் முதல் பாகம் எடுக்கும்போதே 2ம் பாகத்திற்கும் சேர்த்து கதை எழுதிவிடுவார்கள். கோ கோ 2, டார்லிங் டார்லிங் 2, அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, கைதி, கைதி 2, புதுப்பேட்டை, புதுப்பேட்டை 2, துப்பறிவாளன், துப்பறிவாளன் 2, கேஜிஎப், கேஜிஎப்2, ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை,வடசென்னை 2, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத்தாண்டி வருவாயா 2, துப்பாக்கி, துப்பாக்கி 2, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என படங்கள் வரிசையாக 2ம் பாகத்திற்குத் தயாராகி வருகின்றன. வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles
Next Story
Share it