கேஜிஎஃப் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். நேற்று ஜனவரி 8ம் தேதி அவருடைய பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 1986ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பிறந்த யஷ் தனது 38வது பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாட நினைத்த நிலையில், கடைசியில் பெருஞ்சோகத்தில் முடிவடைந்தது சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2007ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஜம்படா ஹுடுகி படத்தின் மூலம் ஹீரோவானவர் தான் யஷ். பல படங்களில் நடித்து வந்தாலும் கன்னட திரையுலகை விட்டு வெளியே தெரியாத அவர், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் முதல் பாகத்தில் நடித்து பான் இந்தியா ஹீரோவாக உருவானார்.
இதையும் படிங்க: கேப்டன் நடிக்க வேண்டிய படம்! வடிவேலுவால் எல்லாம் போச்சு – பலமான கூட்டணியா இருந்திருக்கே
குறைந்த பட்ஜெட்டில் எடுத்த அந்த படம் 250 கோடி வரை வசூல் ஈட்டியது. அதனைத் தொடர்ந்து 2022ல் வெளியான கேஜிஎஃப் 2 படம் 100 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு 1100 கோடி வசூலை ஈட்டி கன்னட திரையுலகத்தை உலகளவில் திரும்பி பார்க்கச் செய்தது.
நடிகர் யஷ் அடுத்து டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். நேற்று அவரது 38வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அதற்காக பெரிய பெரிய கட் அவுட்கள் வைத்து, அதில் ஏறி ரசிகர்கள் மாலை அணிவிப்பது, பாலாபிஷேகம் செய்வது என பைத்தியக்காரத்தனத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியான சோக நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ரணகளமா இருக்கே!.. ஜூனியர் என்டிஆரின் தேவரா க்ளிம்ப்ஸ் எப்படி இருக்கு?
உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டுக்கு நடிகர் யஷ் சென்று கண்கலங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கர்நாடக முதலமைச்சர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் அறிவித்துள்ளார்.
நடிகர்கள் கட் அவுட் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான் இந்த கொடுமை எல்லாம் குறையும்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…