More
Read more!
Categories: Cinema News latest news

ஷங்கரையே பின்னுக்கு தள்ளிய அட்லீ! ‘ஜவான்’ படம் 300 கோடினு சொல்றதெல்லாம் பொய்யா?!..

தமிழ் சினிமாவில் ஒரு செல்லப்பிள்ளை இயக்குனராக திகழ்ந்து வருபவர் அட்லீ. சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். முதல் படமே அமோக வெற்றி. அந்த வெற்றி அடுத்த வெற்றிப்படங்களை கொடுப்பதற்கும் உதவியாக இருந்தது.

தொடர்ந்து விஜயை வைத்து அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்ததன் மூலம் திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். அதுவும் விஜய் கொடுத்த ஊக்கம்தான் காரணம் என ஒரு மேடையில் அட்லீயே சொல்லியிருக்கிறார்.

Advertising
Advertising

இப்போது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜவான். ஏற்கனே ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வரை வசூல் செய்து ஹிந்தி சினிமாவையே தூக்கி நிறுத்தியது. அந்தப் படத்திற்கு பிறகு வெளியாக கூடிய படமாக ஜவான் படம் அமைய இருக்கிறது.

இந்தப் படத்தில் பெரும்பாலும் தமிழ் டெக்னீசியன்களே பணியாற்றியிருக்கின்றனர். கூட நடிக்கும் சக நடிகர்களும் பெரும்பாலும் கோலிவுட்டில் இருந்து தான் இறக்கியிருக்கிறார் அட்லீ. சமீபத்தில் தான் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படிங்க : இனி என்னால் நடிக்க முடியாது… இயக்குனரின் காலில் விழுந்த லைலா… என்ன நடந்தது?

அதனை தொடர்ந்து ஜவான் படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் இந்தப் படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஷங்கரை விட மிகவும் பிரம்மாண்டமாக ஜவான் படத்தை எடுத்திருக்கிறார் அட்லீ.

அதுவும் டிரெய்லரை பார்க்கும் போது எந்தவொரு சிஜியும் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. ஃபிரேமுக்கு ஃபிரேம் தத்ரூபமாக எடுத்திருக்கிறார் அட்லீ. படத்தின் கதை இதுதான் என்றும் சொல்ல முடியவில்லை. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : ரஜினிக்கு காரை பரிசாக வழங்கிய சன்பிக்சர்ஸ்! எப்பா அல்ட்ரா டீலக்ஸ் காரா இருக்கும் போலயே! நெல்சா என்ன இது?

பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாகவே படம் இருக்கும் என்பதால் நிச்சயமாக 300 கோடிக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுவும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் இருக்க 10 நாள் செலவே 300 கோடியாக இருக்கும். அப்படி இருக்கும் போது மொத்த பட்ஜெட் எப்படி 300 கோடியாகும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது சங்கரை விட குறைந்தது ஒரு ரூபாயாவது அதிகமாக வாங்குபவராகத்தான் அட்லீ இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் எடுக்கும் படங்களும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கின்றது. ஒரு வேளை இந்த ஜவான் திரைப்படமும் எல்லையில்லா வெற்றி பெற்றால் அட்லீக்கு இருக்கும் லெவலே வேறு மாதிரியாக மாறிவிடும்.

Published by
Rohini

Recent Posts