Cinema History
34ம் ஆண்டுக்கு இவ்வளவு போஸ்ட்டா- நாயகனை கொண்டாடிய ரசிகர்கள்
நாயகன் திரைப்படம் கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தீபாவளி ரிலீஸ் ஆக வந்த படமாகும். கடந்த சில வருடங்களாக பல திரைப்படங்கள் வந்தாலும் பழைய படங்களை தூசி தட்டி பலர் எழுதி வருகின்றனர்.
இதற்கு பழைய படங்கள் பலவற்றின் மீது உள்ள ஈர்ப்புதான் காரணம் என கூறலாம். மேலும் சமூக வலைதளங்கள் பலவற்றிலும் சினிமா இணையதளங்கள் சிலவற்றிலும் 30 வருடம் முன்பு 20 வருடம் முன்பு வந்த படங்களின் ரிலீஸ் தேதி அன்று இந்த படம் வந்து 30 வருஷமாச்சு, 40 வருஷமாச்சு என செய்திகள் வருவது வழக்கமாக உள்ளது.
சமூக வலைதளங்களிலும் அந்தக்கால ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ராமராஜன் படங்களை அக்காலங்களில் ரசித்த ரசிகர்கள் அந்த படங்களின் ரிலீஸ் தேதி வரும்போது போஸ்ட் போட்டு கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வருடம் அக்டோபர் 21ம் தேதியன்று சமூக வலைதளங்கள் அனைத்திலும் நாயகன் படம் வந்து 34 வருடங்கள் என போஸ்ட்கள் அதிகமாக தென்பட்டது. இதற்கு முன் இது போல மெமரீஸ் போஸ்ட்கள் வந்துள்ளன. ஏன் கடந்த வருடம் கூட நாயகன் படத்தின் 33வது வருட போஸ்ட்கள் வந்தன.
இந்த வருடம் என்ன காரணமென்றே தெரியவில்லை நாயகன் படம் வந்து 34 வருட மெமரீஸ்க்கு அதிக போஸ்ட்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
இவ்வளவிற்கும் இந்த படம் ரவுண்ட் ஆக 35 வருடங்களோ , 40 வருடங்களோ வரவில்லை 34ம் ஆண்டுக்கு நாயகன் படம் பற்றிய நினைவுகளை அளவுக்கு அதிகமாக அன்லிமிட்டெட் மெமரீஸ் ஆக டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பலர் பகிர்ந்ததை பார்க்க முடிந்தது.
அந்த அக்டோபர் 21ம் தேதி முடிந்து இரண்டு நாட்களாகியும் தொடர்ந்து அது பற்றிய போஸ்ட்களை பார்க்க முடிகிறது.
இந்த படத்திற்கு சம்பந்தமேயில்லாத 2 கே கிட்ஸ்கள், 90ஸ் கிட்ஸ்கள் பலரும் இந்த படத்தை பற்றி சிலாகித்து எழுதி இருந்தனர்.
ஒரு திரைப்படம் வெளியாகி இவ்வளவு ஆண்டுகளில் இவ்வளவு தாக்கத்தை ஒரு திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது என்றால் ஆச்சரியம்தான்.
வரதராஜ முதலியார் என்ற மும்பையை கலக்கிய தமிழர் ஒருவரின் கதைதான் நாயகன் திரைப்படத்தின் கதை. வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் வாழ்ந்து இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
வ்லுவான கதையாலும் இசையாலும் பாடல்களாலும் இப்படம் வெற்றி பெற்று இன்று வரை நம் நினைவில் இப்படம் நிற்கிறது.