45 வருட சினிமாவை நிறைவு செய்த ராதிகா! இப்படியொரு காரியத்தை பண்ணுவாருனு நினைக்கல
இலங்கையில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவிற்கே ஒரு பெருமையாக திகழும் நடிகை ராதிகா. 80களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. அரசியல்வாதியாக தயாரிப்பாளராக சின்னத்திரை நிறுவனராக என பன்முக திறமைகளை ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்.
சின்னத்திரை மீது மக்களுக்கு இந்த அளவுக்கு மோகம் இருப்பதற்கு முழு காரணமே ராதிகா தான். தன்னுடைய சித்தி தொடர் மூலம் அனைத்து குடும்பப் பெண்களையும் சின்னத்திரை மீது இழுத்தார் ராதிகா. சித்தி தொடர் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மக்கள் மத்தியில் சீரியலை மிகவும் பிரபலப்படுத்தியது.
இதையும் படிங்க : நான்தான் யாஷை வளர்த்து விட்டேன்!… அவரால் கே.ஜி.எஃப் ஓடவில்லை… இதான் காரணம்… மூச்சுமுட்ட பேசிய தமிழ் நடிகர்!
கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ராதிகா. அந்தப் படத்திற்கு ஒரு புதுமுக நடிகையை நடிக்க வைக்க பாரதிராஜா தேடிக் கொண்டிருந்தபோது வீட்டு வாசலில் ராதிகாவை கண்டார் பாரதிராஜா. கரு நிறத்துடன் குண்டான உடல் அமைப்புடன் நடிகை என்ற அந்தஸ்தே இல்லாமல் இருந்தாராம் ராதிகா.
ஆனாலும் நம் கதைப்படி இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்ற காரணத்தினால் ராதிகாவின் அம்மாவிடம் போய் பாரதிராஜா அணுகி இருக்கிறார். அதன் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் தான் ராதிகா. அதிலிருந்தே பாரதிராஜா மீது ஒரு தனி மரியாதை உடனும் மதிப்புடனுமே ராதிகா நடந்து கொள்வார்.
முதல் படத்திலிருந்து யார் இந்த நடிகை என்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினார். அந்த அளவுக்கு தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நடிப்பிற்கு இலக்கணமாக கிட்டத்தட்ட சாவித்திரிக்கு அடுத்தபடியாக ராதிகாவை பலரும் பாராட்டினார்கள்.
இதையும் படிங்க : எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டது மட்டும்தான் தெரியும்! ஆனால் அதை முன்பே சின்னவரிடம் எச்சரித்த அந்த நபர் யார் தெரியுமா?
தன்னுடைய 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்த ராதிகாவை பிரபலங்கள் உட்பட அனைவரும் இணையம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ராதிகாவோ இதுவரை பாரதிராஜாவை நேரில் போய் சந்திக்கவே இல்லையாம்.
தான் யார் மூலமாக சினிமாவிற்குள் வந்தோம் என்பதை கூட மறந்து போனில் பாரதிராஜாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பெற்றாராம். இதை ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.