Connect with us
mgr

Cinema History

எம்.ஆர்.ராதா சுட்டது மட்டும்தான் தெரியும்! ஆனால் அதைப்பற்றி பலமுறை எம்ஜிஆரிடம் எச்சரித்த நபர் யார் தெரியுமா?

1967 ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய வருடம். எம்ஜிஆரை எம்ஆர் ராதா தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்ட வருடம் தான் அது. எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டது என்னமோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இன்று வரை அவர் ஏன் எம்ஜிஆரை சுட்டார் எந்த காரணத்திற்காக சுட்டார் என்ற செய்தி மர்மமாகவே இருக்கிறது.

ஆனால் இந்த சம்பவம் எல்லாம் நிகழ்ந்து சில வருடம் கழித்து எம் ஆர் ராதா “எம்ஜிஆரும் நானும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். சினிமாவில் எங்களுக்குள் மோதல் இருந்திருக்கிறது. ஒரு வேளை கம்பு இருந்திருந்தால் நாங்கள் கம்புச்சண்டை போட்டிருப்போம். துப்பாக்கி தான் இருந்தது. அதனால்தான் அவரை சுட்டேன்” என அனைவரையும் உலுக்கிய ஒரு சம்பவத்தை கூட மிக சாதாரணமாக கடந்து போனார் ராதா.

இதையும் படிங்க: ஜெட்வேக வசூல்!. முதல் தமிழ்படம்!.. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர்…

அன்று மாலை எம்ஜிஆர் வீட்டிற்கு சென்ற எம்ஆர் ராதா தன்னுடைய துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் எம்ஜிஆரை நோக்கி சுட எம்ஜிஆரின் இடது காதை ஒட்டி குண்டு துலைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றி மற்றும் தோளிலும் இரண்டு குண்டுகளை வைத்து சுட்ட எம் ஆர் ராதா ரத்தத்தில் மிதந்தார்.

ஆனால் இப்படி இருந்தும் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் மட்டும்தான் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எம்ஜிஆரை எம்ஆர் ராதா சுடப் போகிறார் என ஏற்கனவே பல நேரம் எம்ஜிஆர் இடம் எச்சரித்திருக்கிறார் தயாரிப்பாளார தேவர். ஆம் பலமுறை எம்ஜிஆர் இடம் உங்களை சுடுவதற்காக எம் ஆர் ராதா காத்துக் கொண்டிருக்கிறார் அதனால் எந்நேரமும் ஜாக்கிரதையாக இருங்கள் என சொல்லிக் கொண்டே இருந்தாராம்.

அவர் சொன்னதைப் போலவே இந்த சம்பவம் நடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்ஜிஆரை பார்க்க தேவரும் ஆரூர்தாசும் சென்றிருக்கிறார்கள். அப்போது எம்ஜிஆரை பார்த்து தேவர் நான்தான் சொன்னேனே குறைக்கிற நாய் கடிக்கும் என்று. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் ஆனால் குறைக்கவே இல்லையே. நேரடியாக கடித்து விட்டதே என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : போதும்டா நிறுத்துங்க!.. ஜெயிலர் உண்மையான வசூல் இதுதான்!.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

மேலும் கூறிய எம்.ஜி.ஆர் “எப்படியோ அந்த குண்டுகள் வீரியம் இழந்ததாக இருந்ததனால் நான் பிழைத்துக் கொண்டேன். இல்லையென்றால் என்னவாகி இருக்கும்” என தேவரிடம் கூறினாராம் எம்ஜிஆர். இந்த செய்தியைப் பற்றி ஆரூர்தாஸ் அவருடைய புத்தகம் ஒன்றில் எழுதி இருக்கிறாராம். இதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் மூலம் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top