போதும்டா நிறுத்துங்க!.. ஜெயிலர் உண்மையான வசூல் இதுதான்!.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் கடந்த10ம் தேதி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஏனெனில், ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டிய நிலையில் ரஜினி இருந்தார்.
படம் வெளியானதும் வழக்கம்போல் மூவி டிராக்கர்ஸ் பலரும் டிவிட்டரில் இப்படத்தின் வசூலை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். முதல் நாள் 100 கோடி தாண்டிவிட்டது. இரண்டாம் நாள் ரூ.160 கோடியை தாண்டிவிட்டது. 3ம் நாள் ரூ.250 கோடி, 4ம் நாள் 300 கோடி, 5ம் நாள். 350 கோடி, 6ம் நாள் ரூ.400 கோடி வசூலை தாண்டிவிட்டது. 7ம் நாள் ரூ.450 கோடி வசூலித்துவிட்டது என அள்ளிவிட்டனர்.
இதையும் படிங்க: ரஜினி ராஜாங்கம்.. இத்தனை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையா!.. ஜெயிலர் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?..
குறிப்பாக விக்ரம் படத்தில் ரூ.400 கோடி வசூலை ஜெயிலர் படம் ரூ.6 நாட்களில் வசூலித்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். மேலும், பொன்னியின் செல்வனின் ரூ.500 கோடி வசூலை ஜெயிலர் விரைவில் கடந்துவிடும் எனவும் பலரும் சொல்லி வந்தனர்.
இதை பிரபல யுடியூப் சினிமா விமர்சககர் தமிழ் டாக்கீஸ் புளூசட்ட மாறன் கடுமையாக கிண்டலடித்து வந்தார். எல்லாம் ஏண்டா இப்படி வடை சுடுறீங்க!. கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்கடா.. அவங்களே சொல்லுவாங்க!..’ என அவர் பதிவிட்டு வந்தார்.
ஆனால், புளூசட்ட மாறனை கடுமையாக திட்டிய ரஜினி ரசிகர்கள் மூவி ட்ராக்கர்ஸ்கள் பதிவிட்ட தகவலை பரப்பி வந்தனர்.
இந்நிலையில், முதல் வாரத்தில் இப்படம் ரூ.375.40 கோடியை வசூல் செய்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இது இன்னும் அதிகரிக்கும். சரியான தகவலை விரைவில் வெளியிடுவோம் என அறிவித்துள்ளது. இதிலிருந்து சமூகவலைத்தளங்களில் ஜெயிலர் வசூல் தொடர்பாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பொதுவா இதெல்லாம் ரஜினி பண்ண மாட்டாரே!.. ஜெயிலர் வசூல் தந்த சந்தோஷம்!.. அதுக்கு தலையாட்டிட்டாராம்!..