Connect with us

Cinema News

பொதுவா இதெல்லாம் ரஜினி பண்ண மாட்டாரே!.. ஜெயிலர் வசூல் தந்த சந்தோஷம்!.. அதுக்கு தலையாட்டிட்டாராம்!..

இதுவரை அதிகமாக மக்கள் தியேட்டருக்கு வருகை தந்த நாளாக தமிழ் சினிமாவிலேயே இந்த சுதந்திர தினம் மாறியுள்ளதாக அதிரிபுதிரி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் திரைப்படம் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த நிலையில், கமல்ஹாசன் வைத்ததை விட பிரம்மாண்டமான கறி விருந்து கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கறி விருந்து போடுறேன்னு ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருவதாக ப்ளூ சட்டை மாறன் கூட சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டு வம்பிழுத்து இருந்தார். இந்நிலையில், எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு செட்டில் பண்ணி விட வேண்டியது தான் என்கிற ரீதியில் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ரஜினிகாந்த் மெகா விருந்து வைக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…

இண்டஸ்ட்ரி ஹிட்: 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு செய்த 500 கோடி வசூல் சாதனையையும் விரைவில் ஜெயிலர் கடந்து விடும் என்றும் புதிய உச்சத்தை தமிழ் சினிமாவில் ஜெயிலர் தொடும் என ரிப்போர்ட்டுகள் வெளியான நிலையில், சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் என ஜெயிலர் படக்குழுவினரே மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இயக்குநர் நெல்சனுக்கு கார் அல்லது அதை விட உயர்ந்த பரிசு ஒன்றையும் தருவதற்கு ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், நடைபெறவுள்ள கறி விருந்தில் சினிமா விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், ரஜினி மன்ற ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஜெயிலர் படக் குழுவினர் என அனைவரையும் அழைத்து விருந்துக் கொடுக்கப் போகிறார் ரஜினிகாந்த் என்கின்றனர்.

இதையும் படிங்க: நீ ஜெயிச்சிட்ட மாறா!.. விக்ரம் பட வசூலை 6 நாளில் தாண்டிய ஜெயிலர்!.. கெத்து காட்டும் ரஜினி…

பிரம்மாண்ட கறி விருந்து: 

இதுவரை இல்லாத மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் இருந்த நிலையில், தான் இந்த நிலையிலும் தலைகணம் வந்து விடக் கூடாது என்பதற்காக 72 வயதிலும் இமய மலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார் சூப்பர்ஸ்டார் என்றும் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த் இமய மலையில் இருந்து திரும்பி வந்ததும் தடபுடல் விருந்து கன்ஃபார்ம் என்றும் லால் சலாம் படத்திற்கான ப்ரமோஷன் மற்றும் தனது அடுத்த பட ஷூட்டிங் என பிசியாகி விடுவார் என தெரிகிறது.

இதையும் படிங்க: காக்கா, பருந்து கதைக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விஜய்! ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

google news
Continue Reading

More in Cinema News

To Top