Connect with us
vijay

Cinema News

காக்கா, பருந்து கதைக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விஜய்! ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் லியோ. பெரிய பெரிய மல்டி ஸ்டார்கள் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமாக தயாராகிக் கொண்டு வருகின்றது. ஒவ்வொரு அப்டேட்டையும் மிக திரில்லிங்காக அடுத்தடுத்து வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் லோகேஷ்.

சஞ்சய் தத் பிறந்தநாளின் போது அவர் சம்பந்தப்பட்ட ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. நேற்று அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் அவருடைய ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

இன்னும் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்க 60 நாட்கள் படம் ரிலீஸ் ஆக இருப்பதால் இன்னும் நிறைய அப்டேட்டுகள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெற இருக்கிறது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

ஆனால் அனைவரது விருப்பமாக சென்னையில் நடந்தால் மிக நன்றாக இருக்கும் என்பதுதான். மேலும் சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடந்த ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் அந்த பேச்சுக்கு கண்டிப்பாக விஜய் பதிலடி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மலேசியாவில் நடத்தப் போவதாக செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க : ஹரோல்டு தாஸ் க்ளிம்ஸ் வீடியோவில் விஜய கவனிச்சீங்களா?.. அப்போ இதுதான் கதையா?..

ஆனால் திடீர் மாற்றமாக லியோ படக்குழு சொன்ன தேதியில் மலேசியாவில் வேறு ஏதோ ஒரு ஈவென்ட் நடக்க இருப்பதால் அந்த தேதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இருந்தாலும் அந்த ஈவென்டை நடத்த போகும் நிறுவனம் இன்னும் இரு தினங்களில் தங்களுடைய முடிவை சொல்வதாக சொல்லி இருக்கிறார்களாம்.

இதனிடையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் ஒருவேளை அவர்கள் முடியாது என்றால் கண்டிப்பாக வேற மாற்றமே இல்லாமல் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சில செய்திகள் உலா வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top