ஹரோல்டு தாஸ் க்ளிம்ஸ் வீடியோவில் விஜய கவனிச்சீங்களா?.. அப்போ இதுதான் கதையா?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு லியோ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஏற்கனவே சஞ்சய் தத் பிறந்தநாளன்று அவரின் கேரக்டர் ரிவீல் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது. அதில் அவரது பெயர் ஆண்டனி தாஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக நடிகர் அர்ஜுனின் கேரக்டர் ஹரோல்டு தாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ரிலீஸுக்கு முன்பே பல கோடி பிஸ்னஸ்!.. கெத்து காட்டும் தளபதி!.. ஜெயிலரை தாண்டும் லியோ?!…

நாளுக்கு நாள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ குறித்து செய்யாறு பாலு பல தகவல்களை பகிர்ந்துள்ளார். வெறும் 41 வினாடி மட்டுமே இருக்கும் அந்த க்ளிம்ஸ் வீடியோவில், 14வாது வினாடியில், ஒரு ப்ரிண்டட் சட்டை போட்டு ஒருவர் உட்காந்திருப்பார்.

செடியின் மறைவில் அவரது முகம் தெளிவாக தெரியாமல் இருக்கும், பின்னால் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். அது விஜய் தான் என்று செய்யாறு பாலு உறுதியாக கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே வெளியான நா ரெடி தான் பாடலில் தாஸ்& கோ என்று பின்னால் எழுதப்பட்டிருக்கும்.

தாஸ்& கோ வில்லன்களுக்கும் லியோ விஜய்க்கும் என்ன சம்மந்தம். அவர்களை விஜய் என்ன செய்ய போகிறார் என்பது தான் படத்தின் கதை. இது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

இதுவரை வந்த எல்லா வீடியோக்களுமே சென்னையில் செட் போட்டு எடுக்கப்பட்டது தான். காஷ்மீரில் படப்படிப்பு நடந்தது. அதிலிருந்து ஒரு காட்சியை கூட வெளியிட கூடாது என்று லோகேஷ் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ரோலெக்ஸுக்கே டஃப் கொடுக்கும் ஹரோல்டு தாஸ் அர்ஜூன்.. மிரட்டலான லியோ க்ளிம்ஸ் வீடியோ

 

Related Articles

Next Story