இளையராஜாவுடன் சண்டை!. வாய்ப்பில்லாமல் ஈ ஓட்டிய வைரமுத்து!.. கடவுள் மாதிரி வந்த வாய்ப்பு!...

திரைப்படத்துறையை பொறுத்தவரை சரியான வாய்ப்பு என்பது மிகவும் முக்கியமானது. யார் மூலமாவது ஒரு வாய்ப்பு வர வேண்டும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘நிழல்கள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடல்களை எழுத துவங்கியவர்தான் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்துவின் கவிதை தொகுப்பை படித்துவிட்டு அந்த வாய்ப்பை கொடுத்தார் பாரதிராஜா. ஆனால், புதிய பாடலாசியர்களோடு பணிபுரிய ராஜாவுக்கு விருப்பமில்லை. ஏனெனில், அப்போதுதான் அவர் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனாலும், பாரதிராஜா சொல்லிவிட்டதால் சம்மதித்தார். கடினமான டியூனை போட்டால் வைரமுத்து ஓடிவிடுவார் என நினைத்தார்.

இதையும் படிங்க: உள்ளே போனா வெளியே போக முடியாது!.. ரஜினியின் பண்ணை வீட்டில் நடப்பது என்ன?!..

ஆனால் ‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’ என வைரமுத்து சொன்ன வரி மெட்டின் மீட்டரில் கச்சிதமாக பொருந்தியது. அசந்துபோனார் ராஜா. அந்த படம் வெளியான ஆண்டு 1980. அதன்பின் 1986வரை அதாவது 6 வருடங்கள் ராஜாவின் இசையில் பல படங்களில் பாடல்களை எழுதினார் வைரமுத்து. இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள்.

ilayaraja

அதில், மண் வாசனை, காதல் ஓவியம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை ஆகிய படங்கள் முக்கியமானவை. ஆனால், அதன்பின் ஒரு படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை ராஜா மாற்றி எழுதி பாடலையும் ஒலிப்பதிவு செய்துவிட இது வைரமுத்துவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?

அதன்பின், சுமார் 6 வருடங்கள் வைரமுத்துவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. சில சின்ன சின்ன படங்களில் பாடல்களை எழுதினார். தொடர்ந்து இரண்டரை வருடங்கள் ஒரு படத்திற்கும் அவர் பாடல் எழுதவில்லை. ‘வைரமுத்து அவ்வளவுதான்’ என சினிமா உலகமே நினைத்தது.

அப்போதுதான் பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் வைரமுத்து எழுதிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. ‘காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே’ பாடல் காதலின் பிரிவை சொன்னது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் அது. அதன்பின் பல வருடங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பயணித்து வைரமுத்து 5 தேசிய விருதுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story