Connect with us
jailer

Cinema News

ஜெட்வேக வசூல்!. முதல் தமிழ்படம்!.. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர்…

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வினாயக், மோகன்லால், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். ரஜினிக்கு கடைசி சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதோடு, விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் கொளுத்திப்போட அது பற்றி எரிந்தது.

இதைத்தொடர்ந்து ஜெயிலர் பட விழாவில் ரஜினி பருந்து – காக்கா கதையை சொன்னார். அவர் விஜயைத்தான் காக்கா என சொன்னார் என விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொண்டனர். ரஜினிதான் எப்போதும் நிரந்தர சூப்பர்ஸ்டார் என அவர்கள் கூற, அவர்களுடன் விஜய் ரசிகர்கள் மோத களோபரமானது. ஜெயிலர் படம் வெளியான போது விஜய் ரசிகர்கள் சிலர் அப்படத்திற்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டனர்.

இதையும் படிங்க: போதும்டா நிறுத்துங்க!.. ஜெயிலர் உண்மையான வசூல் இதுதான்!.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

ஆனாலும், ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. முன்பதிவிலேயே பல லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. கடந்த 10ம் தேதி முதல் இதுவரை 80 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படம் ரூ.430 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால், இப்படம் ரூ.450 கோடியை தாண்டிவிட்டதாகவும், விரைவில் பொன்னியின் செல்வன் பட வசூலை ஜெயிலர் தாண்டிவிடும் எனவும் சில மூவி ட்ராக்கர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டனர். ஆனால், படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் ரூ. 375.40 கொடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வேகமாக ரூ.150 கோடியை வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை ஜெயிலர் படம் பெற்றுள்ளது என சில மூவி ட்ராக்கர்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். முதல் நாள் ரூ.29.46 கோடியும், 2ம் நாள் ரூ. 20.25 கோடியும், 3ம் நாள் ரூ. 26.38 கோடியும், 4ம் நாள் 31.04 கோடியும், 5ம் நாள் 15.70 கோடியும், 6ம் நாள் ரூ.24.85 கோடியும், 7ம் நாள் ரூ.11.34 கோடியும் என இதுவரை ரூ.159.02 கோடி வசூல் செய்துள்ளதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீ ஒரு படம் எடுத்தியே!.. ஒரு நாளாவது ஓடுச்சா?.. ப்ளூ சட்டை மாறனை கிழித்துத் தொங்க விட்ட கே. ராஜன்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top