முகத்தை அழகாக காட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 5 நடிகைகள்!.. இதுக்கு பழைய முகமே பரவால்ல போல!..

keerthy suresh
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 5 நடிகைகள் :
இன்றைய சினிமா உலகில் நடிகைகள் எப்பொழுதும் தங்கள் முகத்தை பொலிவாக காட்டுவதற்காக நிறைய முயற்சிகள் செய்து வருகிறார்கள். அத்தகைய வகையில் அழகாக தோற்றமளிக்க நிறைய சர்ஜரிகளையும் செய்து வருகிறார்கள். ஏனென்றால் ரசிகர்களுக்கு அவர்களை பிடிப்பதற்காக அப்படி செய்து வருகிறார்கள்.
அப்படி செய்வதற்கான காரணம் இவருடைய மார்க்கெட் எப்பொழுதும் சினிமா உலகில் நிரந்தரமாக இருப்பதற்கு இப்படி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்று கூறலாம். அந்த வகையில் முகத்தை அழகாக்க சர்ஜரி செய்து கொண்ட ஐந்து நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

priya mani
அந்த வகையில் முதலாவது இடத்தில் இருப்பது நடிகை பிரியாமணி பருத்திவீரன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து மக்களாலும் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு நடிகை ஆவார். தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியாமணி அடுத்தடுத்து வரும் படங்களில் தனது முகத்தை பொலிவுடன் காட்டுவதற்காக சர்ஜரி செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவருக்கு சர்ஜரி செய்ததன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அந்த வகையில் அவர் தனது மூக்கையும் உதடையும் சர்ஜரி செய்துள்ளார். இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க- இன்னைக்கு நைட்டு தூக்கம் போச்சி!… கட்டழகை நச்சின்னு காட்டும் ஷிவானி நாராயணன்…

Shuruthi hassan
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆன நடிகர் கமலஹாசன் அவரின் இரண்டாவது மகளான ஸ்ருதிஹாசன் தனது முகத்தில் ஏற்பட்ட காயத்தினால் அதனை மறைப்பதற்காக மூக்கில் அறுவை சிகிச்சை மூலம் சர்ஜரி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர் தனது முகத்திற்கு ஏற்றார் போல் தனது மூக்கையும் சரி செய்து அடுத்தடுத்து திரைப்படங்களில் வாய்ப்புக்காக இப்படி தனது முகத்தையே மற்றும் அளவிற்கு சென்றுள்ளார்.

keerthy suresh
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது உதட்டை சர்ஜரி மூலம் மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மார்க்கெட்டில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்தால்தான் முடியும் என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். சர்ஜரி செய்த பிறகு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இவர் மாமன்னன் எனும் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Samantha
அடுத்ததாக நடிகை சமந்தா தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நடிகை ஆவார்.இவர் 2012 ஆம் ஆண்டு தனது மூக்கையும் உதடையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்து உள்ளார். காரணம் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. ஆதலால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளார்.மேலும் இவர் சர்ஜரி செய்த பிறகு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Iswariya rai
அடுத்ததாக நாம் பார்க்க இருக்கிற ஹீரோயின் இவர்களை இப்படி சர்ஜரி செஞ்சிருக்காங்கன்னு நீங்க நம்பவே மாட்டீங்க அந்த அளவுக்கு முகத்தையே முழுவதுமாக சர்ஜரி செய்து அழகான தோற்றம் அளித்துள்ளார்.நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர்.தற்சமயம் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நேற்று சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் தனது முகத்தை அழகாக காட்ட முன்னணி நடிகைகள் அனைவரும் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி அமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க- நாலு பேருக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்!.. அசால்ட் பண்ணி வாய்ப்பு வாங்கிய எம்.ஜி.ஆர்..