Connect with us
mgr

Cinema History

நாலு பேருக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்!.. அசால்ட் பண்ணி வாய்ப்பு வாங்கிய எம்.ஜி.ஆர்..

சினிமால் வெற்றிக்கொடி:

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். 1950 முதல் 70 வரை திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆக்‌ஷன் படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக எம்.ஜி.ஆர் போடும் வாள் சண்டைக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்தது. பல திரைப்படங்களில் மல்யுத்த சண்டை காட்சிகளிலும் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார்.

நாடக வாழ்க்கை:

குடும்ப வறுமை காரணமாக ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ஆர். கும்பகோணத்தில் அம்மா மற்றும் அண்ணாவுடன் தங்கியிருந்தார். வீட்டில் வறுமை வாட்டியது. அரசி வாங்ககூட நிலை ஏற்பட்டது. எனவே, பள்ளிக்கு போவதை விட பிள்ளைகளை நாடகத்திற்கு அனுப்பினால் வேலைக்கு சாப்பாடும், உடுத்த உடையும் கிடைக்கும் என்பதால் இரண்டு பிள்ளைகளையும் சிறு வயதிலேயே அவரின் அம்மா சத்யா நாடகத்திற்கு அனுப்பினார்.

இதையும் படிங்க: போற போக்குல வாய்ப்பு கிடைக்கும் போல..கல்யாணத்துக்கு வந்த பொண்ணுக்கு எம்.ஜி.ஆர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!..

துவக்கத்தில் எம்.ஜி.ஆருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெரிய வருமானமும் இல்லை. சிறுவர்கள் என்பதால் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. வேளைக்கு சாப்பாடு கிடைத்தது. அப்போதெல்லாம் நாடகங்களில் சிறுவர்கள் அதிகமாக நடிப்பார்கள். இப்போது போல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்கிற சட்டம் எல்லாம் அப்போது இல்லை.

அகஸ்தியர் வாய்ப்பு:

எம்.ஜி.ஆர் பாய்ஸ் நாடக கம்பெனியில் நடித்து கொண்டிருந்தார். அந்த நாடக நி்றுவனத்தில் இராமாயண நாடகம் அடிக்கடி நடத்துவார்கள். அந்த நாடகத்தில் அகஸ்தியராக நடித்த பையன் சொந்த ஊருக்கு சென்று பின் திரும்பவில்லை. எனவே, 4 சிறுவர்களை அழைத்த நாடக முதலாளி அகஸ்தியர் பேசும் வசன பேப்பரை கொடுத்து ‘இன்று முழுவதும் நன்றாக மனப்பாடம் செய்துவிட்டு நாளை இதை பேசிக்காட்ட வேண்டும். சரியாக பேசுபவருக்கு அகஸ்தியர் வேடம்’ என சொல்லிவிட்டாரம். அதில் எம்.ஜி.ஆரும் ஒருவர். அந்த வசனங்கள் எல்லாம் மிகவும் தூய தமிழில் இருந்தது. அடுத்த நாள் காலை எல்லோரையும் கூப்பிட்டு பேச சொன்னதில் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு மாதம் 5 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. மாத மாதம் அந்த பணத்தை நாடக முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை எம்.ஜி.ஆரின் அம்மா சத்யாவுக்கு மணி ஆர்டரில் அனுப்பி வைத்தார். 5 ரூபாய் என்பது அப்போது பெரிய தொகை ஆகும். அதாவது அப்போது ஒரு ரூபாய்க்கு 15 கிலோ அரசி வாங்கலாம். இந்த பணம் சத்யா அம்மாவுக்கு பெரிய உதவியாக இருந்தது.

இதையும் படிங்க: கடன் வாங்கியதால் ஜப்திக்கு போன வீடு!.. எம்.ஜி.ஆர் சந்தித்த சோதனை!.. எல்லாமே அந்த படத்துக்காக!…

google news
Continue Reading

More in Cinema History

To Top