Connect with us
T.Rajendar

Cinema History

இன்று வரை தன் படத்தையேப் பார்க்காத டி.ராஜேந்தர்… காதல் தோல்வி படத்திற்குப் பின் இப்படியும் ஒரு சோகமா..?

80களில் தமிழ்த்திரை உலகில் தாடி வைத்த இளைஞராகக் காலடி எடுத்து வைத்தார் டி.ராஜேந்தர். கல்லூரி படிப்பு முடிந்ததும் சினிமா கனவுகளுடன் சென்னைக்குச் சென்றார். 80களில் தமிழ்சினிமா உலகில் நிறைய புரட்சிகள் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது களம் கண்ட டி.ராஜேந்தருக்கு நிகராக புரட்சிகள் செய்தது யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் செய்தது நவீன அழகியல் புரட்சி. தாடி வைத்த ஒரு இளைஞராக சினிமா உலகிற்கு வந்த டி.ராஜேந்தர் எல்லா புதுமுகங்களையும் வைத்து ஒரு படத்தை எடுக்கிறேன். எனக்கு வாய்ப்பு தாங்கன்னு கேட்டார். அப்படி கிடைத்த வாய்ப்பு தான் ஒரு தலை ராகம்.

படத்துவக்க விழாவில் பூஜை போடப்பட்டது. அப்போது அய்யர் இந்தப் படம் நல்லபடியா வெளியாகி கோடி கோடியா லாபத்தைக் கொண்டு வந்து கொட்டணும் என்று சொன்னாராம். அப்போது அங்கிருந்த எல்லாரும் சிரித்தார்களாம். டி.ராஜேந்தரை ஏளனமாகப் பார்த்தார்களாம். திரையரங்குகளில் முதலில் சொன்ன தேதியில் ரிலீஸாகுதான்னு பார்ப்போம் என்றார்களாம். ஆனால் படம் வெளியாகி அய்யர் சொன்ன வாக்கு பலித்து விட்டது. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையக் கிளப்பியது.

Oru thalai Ragam

Oru thalai Ragam

காரணம் இருபத்தாறே வயதான டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கை தான். இந்தப் படத்தின் போது தயாரிப்பாளர் இப்ராஹிமுக்கும் டி.ராஜேந்தருக்கும் மோதல். படத்தை நான் தான் இயக்குவேன் என்றாராம் தயாரிப்பாளர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ராஜசேகரனும் இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தாராம். அதனால் படம் ரிலீஸாகும்போது டி.ராஜேந்தரின் பெயர் கூட டைட்டிலில் வரவில்லையாம். இயக்குனர் பெயர் இப்ராஹிம் என்று போட்டுவிட்டார்களாம். படம் சூட்டிங் முடிந்ததும் திட்டமிட்டபடி வெளியாகவில்லையாம்.

படத்தை 100 காட்சிகளுக்கு மேல் பிரிவியூ போட்டுக் காட்டினார்களாம். ஆனால் விநியோகஸ்தர்கள் யாருமே படத்தை வாங்க முன்வரவில்லையாம். காரித் துப்பினார்களாம். அதனால் படம் திட்டமிட்டபடி தேதியில் வெளியாகவில்லையாம். அதன்பிறகு ஒரு வழியாகப் படத்தை ரிலீஸ் பண்ண, கல்லூரி மாணவர்கள் திரையரங்கிற்குப் படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க… நாகர்ஜூனா சொல்லியும் கேட்காத தனுஷ்! ‘குபேரன்’ படக்குழுவை திணற வைக்கும் நம்ம அசுரன்

படம் வெளியாகி ஒரு வாரத்தைக் கடந்ததும் பரவலாகப் படத்தைப் பற்றிய பாசிடிவ்வான செய்திகள் வந்தது. அதன்பிறகு தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க படம் ஒரு வருடத்தையும் தாண்டி ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் சொல்ல முடியாத ஒரு காதலை கருவாக வைத்து அற்புதமான அழகியலோடு டி.ஆர். இயக்கி இரந்தார். ஆனால் படத்தில் இயக்குனர் என்று தன் பெயர் இல்லாததால் அந்தப் படத்தை இன்று வரை டி.ஆர்.பார்க்கவே இல்லையாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top