5வது நாளில் கோட் படத்தோட வசூல் எவ்வளவு வரும் தெரியுமா? அதான் சொல்லிட்டாருல்ல..!
தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் கோட். முதல் நாளே உலகெங்கும் 126 கோடி வசூலித்து விட்டது. ஓவர் சீஸ் லெவல்ல வசூலை வாரிக்குவிக்கிற நடிகர் விஜய் தான். அங்கே பேமிலி ஆடியன்ஸ் அதிகம். விஜய் படத்துல கதை குடியிருந்த கோயில் மாதிரி இருக்கு. ராஜதுரை மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.
Also read: கோட் படத்தில் குட்டி விஜயாக கலக்கியவர் இவர்தான்!.. அட நம்ம இன்ஸ்டாகிராம் பிரபலமா!
விஜய் மாதிரி கமர்ஷியல் ஹீரோவுக்கு வேற என்ன கதைங்க வேணும்? வாழை மாதிரி படத்துல நடிக்க முடியுமா? விஜய்க்கு பக்காவான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் கதை தான் செட்டாகும். அந்த வகையில் கோட் ஜாலியான படம் தான். இந்தப் படம் எனக்குத் தெரிஞ்சி திங்கள் கிழமை வரைக்கும் படம் ஹவுஸ்புல்.
முதல் நாள் வசூலை வைத்து இந்தப் படம் 300 கோடியைக் கூட நெருங்காதுன்னு சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்சி இந்தப் படம் 5 நாள்ல 500 கோடி கலெக்ஷனைக் கொண்டு வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். லட இந்தியாவில் இந்தப் படம் மல்டி பிளக்ஸ்ல ரிலீஸ் ஆகலை.
சிங்கிள் ஸ்கிரீன்ல ரிலீஸ் ஆகியிருக்கு. அதுவும் தமிழ், தெலுங்குல மட்டும் தான். மல்டிபிளக்ஸ்ல ஏன் வரலன்னு தெரியும். குறிப்பாக சௌத்ல இருந்து படம் வந்தா 8 வாரம் கழித்துத் தான் ஓடிடில விடணும். அந்த கண்டிஷனுக்கு ஒத்து வரலைன்னா படத்தை ரிலீஸ் பண்ண மாட்டாங்க.
Also read: கங்குவாக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா!.. அப்ப வேற படம் வராம இருக்கணும்!..
இங்க நாலு வாரத்துக்குள்ள ஓடிடில கொடுக்கச் சொல்றாங்க. வட இந்தியாவில் ஒரு படம் மல்டிபிளக்ஸ்ல ரிலீஸ் ஆனா தான் 70 பர்சன்ட் வருவாய் வரும். அப்போ மல்டிபிளக்ஸ்ல நிறைய ஸ்க்ரீன் வெளியானா தான் இந்தியில டப் பண்ண முடியும். அதெல்லாம் கணக்குப் பார்க்கும் போது இந்தப் படம் முதல் நாள் வசூல் 126 கோடி என்பது வரவேற்கத் தக்க விஷயம்.
மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.