65 ஆண்டு கால சினிமா வாழ்க்கை... கமலைப் பார்த்து மிரண்ட ராஜமௌலி.. அதுதான் ஆஸ்கார் பாடலாம்..!

களத்தூர் கண்ணம்மாவில் களமிறங்கிய உலகநாயகன் இன்றுடன் 65 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார். அவரைப் பற்றி சில லேட்டஸ்ட் தகவல்களைப் பார்ப்போம்.

இந்தியன் 2 படத்தின் தோல்வி ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பேசப்பட்டது. உத்தமவில்லன், அன்பே சிவம் படமும் பிளாப் தான். ஆனால் இந்த அளவுக்கு அந்தப் படங்கள் வந்த புதிதில் பேசப்படவில்லை. ஏன்னா கமல், ஷங்கர் காம்போவில் முதலில் அதிரடியாக இந்தியன் என்ற படத்தைக் கொடுத்து விட்டு அதன் தொடர்ச்சி பிளாப் ஆனால் யாருக்குத் தான் அது திருப்தியைத் தரும்.

எல்லாருக்கும் இருந்த அந்த மனக்குமுறலால்தான் அந்தப் படத்தைப் பற்றிய ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. இதுவே கமல், ஷங்கர் கூட்டணி இந்தியன் 3ல மீண்டு வருவோம் என்ற பொறுப்பையும் தந்துள்ளது.

ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கமல் சினிமா உலகிற்கு வந்து 65ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எத்தனை பெரிய கெட்டப்புகள், எத்தனை பெரிய படங்கள், புதுப்புது முயற்சிகள் என பல சாதனைகளைப் படைத்துள்ளார் கமல். தக் லைஃப் படத்துல கூட ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் கமல் தேடிப்பிடிச்சி ஒரு லென்ஸை அறிமுகப்படுத்தி இருக்கிறாராம்.

Thuglife

Thuglife

அதை ஒளிப்பதிவாளர் ரவிச்சந்திரன் கிட்ட அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகிய 3 பேரும் கேட்டுள்ளார்களாம். அந்தளவு சினிமாவை மேம்படுத்த அவர் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

அந்தகன் படத்தில் குருடனாக இருந்ததைக் கமலைப் பின்பற்றித் தான் நடித்தேன். அந்தக் கேரக்டரை அப்படியே உள்வாங்கி அவரைப் போலத் தான் நடித்தேன். அதனால் தான் அவர் ஆடியோ லாஞ்ச்ல கூட கண்ணாடி போட்டு வந்திருந்தாராம். ஆர்ஆர்ஆர் படத்தின் போது டைரக்டர் ராஜமௌலி கமல் பற்றிப் பெருமையாகப் பேசினாராம்.

காதலா காதலா படத்தில் அவரோட 'காசு மேல காசு வச்சி' பாட்டைப் பார்த்துத் தான் 'நாட்டு நாட்டு'ப் பாடலை எடுத்தேன் என புகழ்ந்து தள்ளினாராம். இதன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் கமலைத் திரும்பிப் பார்க்கும் வகையில் தான் அவரது படங்கள் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கமல், மணிரத்னம் இருவருமே தக் லைஃப் படத்தை இந்த ஆண்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பரபரப்பாக வேலை செய்து வருகிறார்களாம்.

Related Articles
Next Story
Share it