70வது தேசிய திரைப்பட விருதுகள்… முந்திக்கொண்ட பொன்னியின் செல்வன்… சிறந்த நடிகர் யார்?
National awards: 70 வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் முதல் முக்கிய விருதுகளை யார் வென்றார்கள் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையில் தேசிய விருதுகள் மீது பிரபலங்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.
இதையும் படிங்க: இளையராஜா மீது அவ்ளோ வெறுப்பு…. அந்த வார்த்தையை சொல்லி அதிர வைத்த தபேலாகாரர்..!
இந்த முயற்சிக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் 'பொன்னியின் செல்வன்: பாகம் 1' படத்துக்காக வென்று இருக்கிறார். சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதை வென்று இருக்கிறார். தமிழில் அதிக விருதுகளை பொன்னியின் செல்வன் குவித்துள்ளது.
மேலும், சிறந்த கன்னட திரைப்படமாக கே.ஜி.எப் 2 படமும், சிறந்த மலையாள திரைப்படமாக சவுதி வெள்ளைக்காவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா2, சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 23 முறை விஜயுடன் மோதிய சூர்யா இப்போது பணிந்தது ஏன்?!.. கங்குவாவை காப்பாத்தணுமே!..
சிறந்த நடிகராக காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுப்போல சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.