Connect with us
IR

Cinema History

இளையராஜா மீது அவ்ளோ வெறுப்பு…. அந்த வார்த்தையை சொல்லி அதிர வைத்த தபேலாகாரர்..!

இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்தியவர் ஆர்.செல்வராஜ். இவர் தான் இளையராஜாவுக்கு அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கிடைக்க காரணம் ஆனவர். ஆனால் இளையராஜாவுக்கு ஆர்.செல்வராஜ் எப்படி அறிமுகமானார்னு பார்ப்போம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யாவினுடைய சகோதரர் மகன் தான் ஆர்.செல்வராஜ். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் எங்கு நடந்தாலும் பாவலர் வரதராஜனின் இசைக்கச்சேரி நடக்கும். அப்போது பாவலரின் சகோதரர்களான ராஜா, அமரசிங், பாஸ்கர் மூவரும் அந்தக் குழுவில் தவறாமல் இடம்பெறுவர். அவங்க மதுரை வரும்போதெல்லாம் மங்கம்மா சத்திரத்தில தங்குறது தான் வழக்கம். அப்படி அங்கு வரும்போது ஒருநாள் ஆர்.செல்வராஜ் இளையராஜாவை சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே இருவரும் நெருக்கமாகப் பழகி விட்டனர்.

அதன்பிறகு சென்னை சென்ற ஆர்.செல்வராஜ் கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அதன்பிறகு பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராக சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து 1969ல் தனது 26வது வயதிலே சென்னையிலே அடியெடுத்து வைத்தார் இளையராஜா. இசை அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்ப அவருக்குக் கிடைத்தது.

இளையராஜாவுக்கு எப்படியாவது மியூசிக் டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தனது தம்பிக்காக பாஸ்கரும், ஆர்.செல்வராஜூம் வாய்ப்பு தேடி ஏறி இறங்காத கம்பெனிகள் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தமிழ்சினிமா உலகிற்கு புது இசையைக் கொண்டு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஆர்.செல்வராஜிடம் பஞ்சு அருணாச்சலம் தெரிவித்தார். செல்வராஜ் அப்போது இளையராஜாவைப் பற்றி பெருமையாக அவரிடம் சொன்னார்.

Annakili

Annakili

உடனே மறுநாள் இளையராஜா பஞ்சு அருணாச்சலம் சந்திப்பு நடந்தது. அப்போது இளையராஜா ‘மச்சானைப் பார்த்தீங்களா’, ‘அன்னக்கிளி’ ஆகிய 2 பாடல்களையும் மேசையில் தாளம் போட்ட படி பாடிக்காட்டினார். அதைக் கேட்டதும் பஞ்சு அருணாச்சலம் ஒன்ஸ்மோர் கேட்டார். அப்படித்தான் அவருக்கு முதல்பட வாய்ப்பு கிடைத்தது.

செல்வராஜ் மருத்துவச்சின்னு ஒரு கதையை பஞ்சு அருணாச்சலத்திடம் சொல்லி இருந்தார். அந்தக் கதைக்கு ராஜாவின் பாடல்கள் பொருந்தின. அதனால் அந்தப் படத்தில் இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார் பஞ்சு அருணாச்சலம். அவர் பாடிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடலின் முதல் வார்த்தையே படத்தின் தலைப்பானது.

அப்போது பஞ்சு அருணாச்சலம் தான் ராஜாவுக்கு இளையராஜா என்று பெயரிட்டார். இளையராஜா தனது முதல் பாடலுக்கு ரெக்கார்டிங் பண்ணும்போது கரண்ட் போய்விட்டது. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி. எல்லாத்துக்கும் மேல டோலக் வாசிச்சவரு ‘நல்ல சகுணம் தான்’னு ஒரு வார்த்தையைப் போட்டுட்டாரு. இதை எல்லாம் கேட்டதும் நொறுங்கிப் போனார் இளையராஜா.

அப்போது அங்கு இளையராஜாவை வாழ்த்த வந்த பி.மாதவன் அவர் தனியாக சோகத்துடன் இருப்பதைப் பார்த்து ஆறுதல் சொன்னார். அதன்பிறகு கரண்ட் வந்தது. அப்போது ரெக்கார்டான முதல் பாடல் தான் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’. அது முடிந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு கைதட்டினாங்க. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top