80ஸ், 90ஸ் தமிழ்சினிமாவுல சம்பளம் அதிகமா வாங்கிய நடிகர்கள் லிஸ்ட்… முதலிடம் அவரா?

vijayakanth, kamal, rajni
80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ்சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நிலவியது. பல ஹீரோக்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாயின. அப்போது பொங்கல், தீபாவளி எல்லாம் வந்து விட்டால் 15 படங்கள் வரை ரிலீஸ் ஆகும்.
கமல், ரஜினி, விஜயகாந்த், பாக்கியராஜ், பிரபு, சத்யராஜ், ராமராஜன், கார்த்திக், ராம்கி, மோகன், சரத்குமார், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் என பல கதாநாயகர்களின் படங்கள் சக்கை போடு போடும். பாடலும் தெறிக்க விடும். அந்தக் காலகட்டத்தில் எந்தெந்த ஹீரோக்கள் அதிகமாக சம்பளம் வாங்கினார்கள்னு பார்க்கலாமா…
மக்கள் நாயகன் ராமராஜன் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் வாங்கிய சம்பளம் 4 லட்சம். கவுண்டமணி காமெடி, ஹீரோ என பல படங்களில் நடித்துள்ளார். இவரும் 4 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். நடிகர், இயக்குனர் வரிசையில் பாண்டியராஜன் 3 லட்சம் சம்பளம், டி.ராஜேந்தர் 5 லட்சம் என சம்பளம் வாங்கியுள்ளனர்.

திரைக்கதையில் மன்னன் என்று பெயர் வாங்கி தாய்க்குலங்களைக் கவரும் வகையில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பாக்கியராஜ் 4 லட்சம், பார்த்திபன் மூன்றரை லட்சம், அருண்பாண்டியன் இரண்டரை லட்சம், என சம்பளம் வாங்கியுள்ளனர்.
மண்வாசனை போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த பாண்டியன் 4 லட்சம், ராம்கி 4 லட்சம், ராஜ்கிரண் 6 லட்சம், பல வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்த மைக் மோகன் 8 - 10 லட்சம் வாங்கியுள்ளனர். முரளி 4 லட்சம், ஆக்ஷன் ஹீரோ 8 - 10 லட்சம், நவரச நாயகன்கார்த்திக் 12 லட்சம் என வாங்கியுள்ளனர்.
ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிக்கும் வகையில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இளையதிலகம் பிரபு 18 லட்சம், புரட்சி நடிகர் சத்யராஜ் 20 லட்சம், கேப்டன் விஜயகாந்த் 20 - 22 லட்சம் என சம்பளம் வாங்கியுள்ளார். கமல் 20 லட்சம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 60 லட்சம் என வாங்கியுள்ளனர்.