80ஸ் தான் தமிழ்சினிமாவின் பொற்காலம்... அதுக்கு இந்த ஒரு காரணமே போதும்..!

KVR
80ஸ் குட்டீஸ்களிடம் கேட்டால், அப்போது வெளிவந்த படங்களைப் பற்றி சிலாகித்துச் சொல்வார்கள். கமல், ரஜினி என இரு பெரும் ஜாம்பவான்களுடைய ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு படம் வெளியான முதல் நாளில் தியேட்டரில் திருவிழாவாகக் கொண்டாடுவர்.
இதையும் படிங்க...விஜயகாந்திடம் இருந்த ஒரு விஷயம்! நம் யாரிடமும் இதுவரை இல்லை.. சூப்பரா சொன்ன மோகன்
கட் அவுட், பேனர், வால் போஸ்டர்களில் தங்கள் நாயகன் படத்தையும், தங்களது படத்தையும், பஞ்ச் டயலாக்கையும், நாயகனின் புகழையும் ஒரு சில வரிகளில் போட்டு அசத்தி விடுவார்கள். அதே சமயம் பிற நடிகர்களான சத்யராஜ், விஜயகாந்த், பிரசாந்த், சரத்குமார், மோகன், முரளி, கார்த்திக், பாக்கியராஜ், ராம்கி, ராமராஜன் என அவர்கள் நடிக்கும் படங்களும் சக்கை போடு போடும்.
பொதுவில் அப்போது வரும் படங்களின் கதை, காமெடி, பைட், பாட்டு, சென்டிமென்ட் என எல்லாமே அசத்தலாக இருக்கும். எல்லாமே கமர்ஷியலாக ஹிட் அடிக்கும். அதனால் தான் அந்தக் காலத்தை தமிழ்த்திரை உலகின் பொற்காலம் என்றார்கள். இதுபற்றி மேலும் தகவல்களைத் தருகிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
சில விஷயங்களை யார் நினைச்சாலும் திரும்பக் கொண்டு வர முடியாது. அது மாதிரி தான் 80களுடைய பொற்காலமும்னு நான் நினைக்கிறேன்.
அந்தக் காலத்தில் ஒரு திரைப்படத்தை அறிவித்த உடனே அதை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் வந்துவிடுவார்கள். அப்படி அவர்கள் வாங்குவதற்கு பல திரையரங்கு உரிமையாளர்கள் அவர்களுக்குப் பண ரீதியாக உதவி செய்தார்கள்.
அப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழ்நிலை அந்தக்கால கட்டத்தில் இருந்தது. அதனால தயாரிப்பாளர்களின் பளுவும் குறைந்தது. இப்போது ஒரு திரைப்படத்தை வெளியிடுகின்ற வரையில் அந்தத் தயாரிப்பாளர் தான் முழு செலவையும் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதே மாதிரி படப்பிடிப்புத் தளத்தில் கேரவன் எல்லாம் கிடையாது.
இதையும் படிங்க... ஒரே நாளில் இவ்ளோ பாடல்களைப் பாடினாரா எஸ்.பி.பி? மனுஷன் தூங்கவே இல்லையா?
அதனால படப்பிடிப்பு இடைவேளையில் எல்லா நடிகைகளும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொள்கிற சூழ்நிலை இருந்தது. ஒரு சகோதரத்துவம் உருவாகக் காரணமாக அமைந்தது. இப்போ எல்லா நடிகர், நடிகைகளும் தனித்தனி தீவாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.