விஜயகாந்திடம் இருந்த ஒரு விஷயம்! நம் யாரிடமும் இதுவரை இல்லை.. சூப்பரா சொன்ன மோகன்

Mohan Vijaykanth: பொதுவாக ஒருவர் ஆரம்பித்து வைத்த கொள்கை பாதை என முழுவதுமாக பின்பற்றி வரும் நிலையில் அவருக்கு அடுத்தபடியாக அதை மிக திறமையாக பின்பற்ற இன்னொரு ஆள் வருவது என்பது மிகக் கடினம். ஆனால் சினிமாவை பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆருக்கு என சில கொள்கைகள் இருந்தது. அவர் வகுத்த விதிமுறைகள் என சிலவற்றை சொல்லலாம்.

அதை அவருக்கு பிறகு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி அந்தப் பாதையை மறுபடியும் அமைத்தவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். ஒரு நடிகராக அவர் செய்த சாதனைகள் ஏராளமானவை. இன்று பெரிய அளவில் நாம் கொண்டாடப்படும் நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் சாதனைகளுக்கு இணையாக பேசப்பட்டன. அரசியலில் அவர் பெற்ற வெற்றி எம்ஜிஆரின் வெற்றிக்கு இணையாக எதிரொலித்தது.

இதையும் படிங்க: புஷ்பா 2 வெளியே!.. சந்துல சிந்து பாடிய சியான் விக்ரம்!.. சுதந்திர தினத்துக்கு யாருக்கு ஜாக்பாட்?..

150 படங்களுக்கு மேல் நடித்து இன்றும் நம் மனதில் வைத்து பூஜிக்கப்படும் நடிகராக இருந்து வருகிறார் விஜயகாந்த். இதற்கு முன் எம்ஜிஆரை தான் கடவுளாக அனைவரும் கும்பிட்டு வந்தனர். அவருக்கு அடுத்தபடியாக இப்போது விஜயகாந்தை ஒரு தெய்வமாக அவருடைய சமாதிக்கு சென்று ரசிகர்கள் பலர் கூட்டம் கூட்டமாக வணங்கிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி மோகன் அவருடைய அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். விஜயகாந்துடன் நூறாவது நாள் என்ற படத்தில் இணைந்து நடித்திருப்பார் மோகன். அந்தப் படத்தின் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் இருவருக்கும் பைட் சீன் ஒன்று இருக்கும். அதில் இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடுத்திருப்பார்கள்.

இதையும் படிங்க: பொதுவா வீட்ல இருக்கும் ஃபிரிஜ்ஜில் என்ன இருக்கும்? ஆனால் இந்த நடிகை என்ன வச்சிருந்தாங்க தெரியுமா?

இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி மோகன் ‘தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான மனிதர் விஜயகாந்த். இப்படிப்பட்ட ஒரு நேர்மையான மனிதரை சினிமாவில் பார்ப்பது மிகவும் கஷ்டம். அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசுபவர். விஜயகாந்தை பற்றி பேசினாலே முதலில் அனைவரும் பேசுவது அவருடைய அன்னதானம் பற்றி தான்.

எந்த நேரத்திலும் எவருக்கும் உடனடியாக உதவி செய்யக்கூடியவர் விஜயகாந்த். தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்று தான் சொல்வார்கள். ஆனால் எந்த நேரத்தில் யாருக்கு என்ன செய்கிறார் என நேரம் கூட பார்க்காமல் வெளியில் இறங்கி வேலை செய்யக்கூடியவர்.

இதையும் படிங்க: பிரபல சீரியல் நடிகருடன் மறுமணம் செய்யப் போகும் ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகை! அட இவரா?

இவை எல்லாவற்றையும் தாண்டி அவருடைய நிர்வாகத் திறமை பிரமிக்க கூடியது. நடிகர் திலகம் சிவாஜி இறந்த சமயம் அவருடைய நிர்வாக திறமையை அனைவருமே பார்த்திருக்கிறோம். நடிகர் சங்க தலைவராக இருந்த நேரத்திலும் அவரின் நிர்வாகத் திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருப்பார். விஜயகாந்தை பற்றி இன்னொன்று சொல்லவேண்டுமென்றால் அவருக்கு இருந்த முரட்டு தைரியம் சினிமாவில் இப்போதுஇருக்கும் நம் யாருக்கும் கிடையாது’ என மோகன் கூறினார்.

 

Related Articles

Next Story