பிரபல சீரியல் நடிகருடன் மறுமணம் செய்யப் போகும் ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகை! அட இவரா?

Serial Actress Shruthika: நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருத்திகா. வெண்ணிலா கபடி குழு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ருத்திகா தொடர்ந்து படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் நாதஸ்வரம். திருமுருகன் இயக்கி நடித்த அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அதன் தொடர்ச்சியாக திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஸ்ருத்திஹா .அவருடைய எளிமையான தோற்றம் எதார்த்தமான நடிப்பு மக்களை மிகவும் கவர்ந்தது.

இதையும் படிங்க: விரைவில் வாடிவாசல் ஸ்டார்ட்!.. ஹீரோ அவர்தானாம்!.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து!..

அவருக்கு என தனி பேன்ஸ் ஃபாலோயர்ஸ் இருந்து வந்தனர். திருமுருகன் இயக்கத்தில் தொடர்ந்து மூன்று சீரியல்களில் நடித்தது, நாதஸ்வரம் சீரியலில் திருமுருகனுக்கும் ஸ்ருத்திஹாவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாக அமைந்ததாலும் அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக அப்போது வதந்திகள் கிளம்பின.

ஆனால் அது எல்லாம் பொய் என ஒரு பேட்டியில் ஸ்ருத்திகா கூறி இருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்ருத்திகாவுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தான் சனீஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் தனது திருமண நிகழ்வை குறித்து ஸ்ருத்திஹா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படத்தோடு நான் இப்போது Mrs ஸ்ருத்திகா சனிஸ் என்றும் சேர்த்து பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: தளபதி 69 படம் டிராப்பா?!.. கோட் முடிஞ்சவுடனே நேரா அரசியலா?!.. என்னதாம்பா நடக்குது!..

ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விவாகரத்து ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார் ஸ்ருத்திஹா. அதோடு மகராசி சீரியலில் நடித்து வரும் ஆரியன் என்பவரை கூடிய சீக்கிரம் பதிவு திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

aryan

aryan

நடிகர் ஆரியனுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆனவர். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த சீரியலில் லீடு ரோலில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேட்டு ஸ்ருத்திகாவுக்கு அவருடைய ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள சூப்பர்ஸ்டாரின் வாய்ப்பைத் தட்டித் தூக்கிய உலகநாயகன்… அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

 

Related Articles

Next Story