கேரள சூப்பர்ஸ்டாரின் வாய்ப்பைத் தட்டித் தூக்கிய உலகநாயகன்... அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!
சில படங்கள் எந்த மொழியில் வந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஏன்னா அதோட பரபரப்பான கதை தான் காரணம். அப்படி மலையாளத்தில் இருந்து வந்த பல படங்கள் தமிழில் சூப்பர்ஹிட் அடித்துள்ளன. உதாரணமாக பாபநாசம், மஞ்சுமல் பாய்ஸ் போன்ற படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் கமல் நடித்த மரோசரித்ரா, ஏக்துஜே கேலியே போன்ற பிற மொழிப்படங்களும் தமிழகத்திலும் வெற்றி நடைபோட்டன.
இதையும் படிங்க... ஆல்ரெடி 2 பேர் பீல்டு அவுட்!.. கவுண்டமணியாவது தப்பிப்பாரா…?
அங்கு பாஷை ஒரு பொருட்டாக ரசிகர்களுக்குத் தெரியவில்லை. படத்தின் காட்சிகள் நல்லா புரியுது. அதன் மூலம் நடிகர்களின் உணர்ச்சிமயமான நடிப்பு கதையை விளக்குகிறது. ரசிக்க வைக்கிறது. அவ்வளவு தான். இது போன்ற படங்கள் ஏன் தமிழில் டப் செய்யப்படவில்லை என்ற ஆதங்கமும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு படம் தான் சாணக்கியன்.
இது 1989ல் மலையாளத்தில் மட்டுமே வந்தது. கமல், ஜெயராம், ஊர்மிளா, திலகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் டி.கே.ராஜீவ்குமார். இந்தப் படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்றது. கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது. காரணம் இதன் பரபரப்பான கதை தான். இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலைப் பார்ப்போம்.
கமல், ஜெயராம் இணைந்து நடித்த சூப்பர்ஹிட் மலையாளப் படம் சாணக்கியன். இதைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவில்லை. அப்படி இருந்தும் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கமல், ஜெயராம் இருவருமே மிகச்சிறப்பாக நடித்து இருப்பார்கள்.
இந்தப் படத்தில் கமலின் பாத்திரமானது முதலில் அவரை மனதில் வைத்து எழுதப்படவே இல்லையாம். அது கேரள சூப்பர்ஸ்டார் மம்முட்டியை மனதில் வைத்து எழுதப்பட்டது. அவரைத் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரின் எண்ணமாக இருந்ததாம்.
அதன்பிறகு அவரது கால்ஷீட் கிடைக்காததால் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கமலுக்குக் கிடைத்ததாம். அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன் என்று தான் சொல்ல வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.