ஆல்ரெடி 2 பேர் படமும் அவுட்!.. கவுண்டமணியாவது தப்பிப்பாரா...?

80களில் கலக்கிய கவுண்டமணி, மோகன், ராமராஜன் என அனைவருமே இப்போது படம் நடிக்க வந்துவிட்டனர். இவர்களில் சமீபத்தில் ராமராஜனுக்கு 'சாமானியன்' படமும், மோகனுக்கு 'ஹரா' என்ற படமும் வெளியானது.

இந்தப் படங்கள் வருவதற்கு முன்பு இருவரும் சமூகவலைதளங்களில் அவர்களது கடந்த கால திரையுலக சுவாரசியங்களைப் பற்றி பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். இதை நெட்டிசன்கள் ரொம்பவே ரசித்துப் பார்த்தார்கள். ஆனால் படம் ரிலீஸானதும் பார்க்கல.

இதையும் படிங்க... தற்கொலை செய்து கொள்வேன்!.. மைக் மோகனை மிரட்டிய மனோபாலா!.. நடந்தது இதுதான்!..

இருவருக்குமே எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லை. இப்போது கவுண்டமணி 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்துக்கு நடிக்க வந்துள்ளார். இவரைப் பொருத்தவரை பேட்டியே கொடுக்க மாட்டார். இவரை வைத்து எப்படி படத்தை புரொமோட் பண்ணுவார்கள்? எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ரஜினி 92ல இருந்து நான் அரசியலுக்கு வர்றேன் என ஒரு சினிமா அரசியல் நடத்திக் கொண்டு இருந்தார். அவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதைத் தொடர்ந்து தக்க வைத்தும் வருகிறார். அவருக்கே பாபா, லால்சலாம் படங்கள் ஓடவில்லை. ஆனாலும் அவருக்குள்ள ரசிகர்கள் தொடர்ச்சியாக இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அதே நேரம் கமலும் ஏதாவது வித்தியாசமாகப் பண்ணிப் பண்ணி தன்னைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். அதே நேரம் யாரோ ஒருவர் பேச்சைக் கேட்டு அரசியலுக்கும் போய் மய்யத்தில் நின்றார். அங்கும் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள். இப்ப சினிமா தான் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

இதைத்தாண்டி அப்பாவித்தனமாக நடிச்சா கதாநாயகனாகத் தான் நடிப்பேன்னு இந்த 3 பேரும் வந்துருக்காங்க. இப்படி இன்றைய சினிமாவைப் பத்தி புரிதல் இல்லாம வந்துருக்காங்க. ஏன்னா இன்றைய சினிமா இருக்குற இடமே வேற.

முன்னாடி ஒருசில வீடுகள்ல தான் டிவியே இருக்கும். இப்போ எல்லாருடைய வீடுகளிலும் டிவி இருக்கு. ஸ்மார்ட் போன்கள் இருக்கு. எல்லாருமே விமர்சகர்களா ஆகிட்டாங்க. ஒரு காலத்தில் சினிமாக்காரங்க மட்டுமே புகழோடு இருந்தாங்க. இன்னைக்கு யூடியூபரும், நெட்டிசன்களுமே பிரபலமாகிட்டாங்க. காலம் ஒருபக்கம் மாறுது.

சினிமாவைத் தாண்டி சேட்டிலைட் சானல்கள் வளர்ந்து வர்ற இந்தக் காலகட்டத்துல ரொம்ப அப்பாவித்தனமாக இருக்குறாங்க. உண்மையிலேயே இது பரிதாபத்துக்கு உரிய விஷயம்தான். இன்றைக்கு இப்படி இருக்கிற சூழல்ல ஒரு படத்தோட கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கணும்.

இதையும் படிங்க... சிம்புவ பத்தி தப்பா பேசி வசமா மாட்டிய தயாரிப்பாளர்… ஆனாலும் கொஞ்சம் கூட ஃபீலாகலையே!

இல்லன்னா துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கறது மூலமா தக்க வச்சிக்கிட்டு சரி பண்ணிக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2015ல் கவுண்டமணி ஹீரோவாக நடித்த 49 ஓ படம் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story